ஹோட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?

Advertisement

How to Find Hidden Camera in Mobile

நம் முன்னோர்கள் காலத்தில் கேமரா என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தது, ஆனால் இன்றைய காலத்தில் மொபைல் கேமரா முதல் கண்ணிற்கு தெரியாத கேமரா வரைக்கும் வந்து விட்டது. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது, ஆனால் இதில் நன்மைகளும் இருக்கிறது, தீமைகளும் இருக்கிறது. இதனை பயன்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது.

தற்போதைய நவீன டிஜிட்டல் உலகில் ரகசிய கேமாராக்களை எங்கு வேண்டுமானாலும் ரகசியமாக மறைத்து வைக்க முடியும். பலரும் விடுதிகள் மற்றும் வெளியில் சென்றால் ஹோட்டலில் தங்குகிறார்கள். இப்படி தங்கும் போது சில அச்சம் ஏற்படும் எங்காவது கேமரா இருக்குமா என்ற பயம் இருக்கும். அதற்கு நீங்கள் செல்லும் ஹோட்டல் மற்றும் trail ரூம் போன்றவற்றில் கேமரா இருப்பதை உங்களின் ஆண்ட்ராய்டு போன் மூலம் கண்டுபிடிக்கலாம் அது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கால் செய்ய வேண்டும்:

நீங்கள் ரூம் எடுத்து தங்க போகிறீர்கள் என்றால் அறைக்குள் சென்றதும்  மொபைலில் யாருக்காவது கால் செய்து அறை முழுவதும் நடக்க வேண்டும், அப்படி நீங்கள் பேசிக்கிட்டே நடக்கும் போது திடீரென இறைச்சல் அல்லது கிளிக் என்று சத்தம் கேட்டால் அங்கு ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம். இவை அறைக்கு மட்டுமில்லை பாத்ரூமிலும் செக் செய்து பார்க்க வேண்டும்.

அடுத்து துணிக்கடையில் உடைகளை எடுத்த பிறகு trail ரூமில் மாற்றி பார்ப்பது பலரும் செய்ய கூடிய ஒன்றாக இருக்கிறது. இதில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது அவசியமானது. உடைகளை மாற்றி பார்ப்பதற்காக trail ரூமிற்கு செல்லும் போது நீங்கள் போனில் யாருக்காவது கால் செய்து பார்க்க வேண்டும். நீங்கள் கால் செய்யும் போது கால் போகவில்லை என்றால் அந்த அறையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

வீடியோ:

ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா

நீங்கள் காஸ்டல் அல்லது ரூம் எடுத்து தங்குகிறீர்கள் என்றால் அங்குள்ள லைட் எல்லாத்தையும் அணைத்து விட்டு இருட்டாக வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களின் மொபைல் மூலம் அறை முழுவதும் வீடியோ எடுங்கள். அதன் பிறகு எடுத்து வீடியோவை பாருங்கள், அதில் சிவப்பு நிற புள்ளிகள் மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தெரிந்தால் கேமரா இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

எங்கெல்லாம் கேமரா இருக்கும்:

கதவுகள், சுவரின் ஒரு மூலை, அறையின் மேற்கூரை, சுவர் கடிகாரம், மின் விளக்கு, புகைப்பட ஃப்ரேம்கள், டிஷ்யூ பெட்டிகள், பூக் குவளை, பூச்செண்டு, புகை கண்டறியும் கருவிகள் இப்படி முன்புறம் ஒரு சிறுதுளை, அதன்பின்னால் ஒரு பேட்டரியோ அல்லது வயரோ செல்வதற்கான இடம் இவை இருக்கும் எந்த இடங்களிலும் ரகசிய படக்கருவிகளைப் பொருத்தமுடியும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement