504 Gateway Timeout Error என்றால் என்ன தெரியுமா? அதை எப்படி சரி செய்வது?

Advertisement

504 Error Gateway Timeout | 504 Gateway Timeout Error  விவரங்கள் | How To Fix 504 Gateway Timeout Error

வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! நாம் இணையதளத்தில் ஒரு தகவலை தேடும் பொழுது நமக்கு சில நேரங்களில் Error வரும் . எதனால் Error வருகிறது என்று நமக்கு தெரியாமல் நாம் இணையதளத்தை விட்டு வெளியேய் வந்துவிடுவோம்.இந்த Error வெவ்வேறு வழிகளில் வரும்.இன்றைய பதிவில் 504 Gateway Timeout Error என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

நமக்கு தெரியாத விஷயங்களை நாம் கூகிள் இடம் கேட்டு தான் தெரிந்துகொள்கிறோம் அப்படி நாம் ஒரு விஷயத்தை தேடும் பொழுது நமக்கு இந்த Error வருகிறது. நாம் இந்த Error எதனால் வருகிறது என்று நாம் பெரும்பாலும் யோசிப்பது இல்லை நாம் தேடுவதை விட்டுவிடுகிறோம்.எதனால் Error வருகிறது என்பதையும் அதை எப்படி சரி செய்வது என்பதையும் பார்ப்போம் வாருங்கள்.

404 Error சரி செய்வது எப்படி?

504 Gateway Timeout Error என்றால் என்ன?

504 Gateway Timeout Error என்றால் நாம் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை பற்றி தேடும் பொழுது நாம் URL Link மூலியமாக தான் தேடுவோம்.அப்படி நாம் Link குடுத்து தேடும் பொழுது நமது இணைய உலாவிலிருந்து (Web Browser) சர்வர்க்கு(Server) ஒரு கோரிக்கை விடுக்கும். சர்வர்(Server) நம் கோரிக்கையை ஏற்று கொண்டால் மட்டும் தான் நாம் இணையதளத்தை பார்க்கமுடியம். நாம் விடுக்கும் கோரிக்கையை ஏற்று கொள்ள சர்வர் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் நமக்கு இந்த 504 Gateway Timeout Error வருகிறது.

அதாவது 504 Gateway Timeout Error என்பது ஒரு HTTP நிலைக் குறியீடாகும்.அதாவது சர்வர்கலிக்கிடையில் தகவல்தொடர்பு சிக்கல் அல்லது வேறு ஏதேனும் சிக்கல்கள் உள்ளது என்று அர்த்தம். ஒரு வலை சர்வர் ஒரு கோரிக்கையை நிறைவேற்ற மற்றொரு சர்வர்க்கு (Upstream Server) விரைவான அல்லது சரியான நேரத்தில் பதிலைப் பெறவில்லை.இதனால் தான் நமக்கு 504 Gateway Timeout Error வருகிறது.

சுருக்கமாக சொல்லணும் ஏன்றால் நாம் ஒரு தகவலை தேடும்பொழுது நமது வலை சர்வர் மற்றோரு சர்வரிடம் தொடர்புகொள்வதில் சிக்கல்கள் இருக்கிறது.இதனால் நமக்கு 504 Error வருகிறது.இந்த Error பல்வேறு வழிகளில் வரும்.

HTTP 504 Gateway Timeout Error பல்வேறு வழிகளில் காட்டும்:

  • 504 நுழைவாயில் நேரம் முடிந்தது (504 Gateway Timeout)
  • 504 கேட்வே டைம்அவுட் NGINX (504 Gateway Timeout NGINX)
  • கேட்வே டைம்அவுட் பிழை (Gateway Timeout Error)
  • பிழை 504 (Error 504)
  • HTTP 504
  • HTTP பிழை 504 – கேட்வே காலாவதியானது (HTTP Error 504 – Gateway Timeout)
  • 504 பிழை (504 Error)
  • பக்க கோரிக்கையை முடிக்க அதிக நேரம் எடுத்ததால் அது ரத்து செய்யப்பட்டது
  • இந்தப் பக்கம் வேலை செய்யவில்லை – டொமைன் பதிலளிக்க அதிக நேரம் எடுத்தது
  • 504 கேட்வே டைம்-அவுட் – சர்வர் சரியான நேரத்தில் பதிலளிக்கவில்லை

504 Gateway Timeout Error காண காரணம்:

  • ஸ்பேம் அல்லது DDoS தாக்குதல்கள்
  • இணையதளம் CDN
  • பயர்வால் தடுப்பு கோரிக்கைகள் (Firewall Blocking Request)
  • இணையதள ஹோஸ்டிங் சிக்கல்கள்

504 Gateway Timeout Error சரி செய்வது எப்படி?

  • வலைப்பக்கத்தை புதுப்பிக்கவும்: 504 Gateway Timeout Error ஒரு தற்காலிக கோளாறாக இருக்கலாம் என்பதால் நாம் வலைப்பக்கத்தை புதுப்பிக்க(Refresh the Webpage) வேண்டும்.
  • பிராக்சி சர்வர்களை இரு முறை சரிபார்க்கவும்: ப்ரொக்சி சர்வர்கள் ஒரு சாதனத்திற்கும் இணையத்திற்கும் இடையிலான நுழைவாயிலாகச் செயல்படுகின்றன. இது குறிப்பிட்ட இணையதளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தவும், குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை அணுகவும் பயன்படுகிறது.தவறான ப்ரொக்சி அமைப்புகளும் 504 பிழைச் செய்தியை விளைவிக்கும் இணைப்புச் சிக்கல்களை ஏற்படுத்தலாம். உங்கள் ப்ரொக்சி சர்வர் அமைப்புகள் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து, அதை சரி செய்ய வேண்டும்.
  • DNS சிக்கல்களைத் தேடுங்கள்: உங்கள் ஹோஸ்டிங் வழங்குநர்கள் அல்லது சர்வர்களை மற்றும் பொழுது இந்த பிழை வரலாம்.உங்கள் டொமைன் பதிவுகள் முழுமையாக முடியும் வரை காத்திருக்க வேண்டும்.
  • பிணைய சாதனங்களை மறுதொடக்கம் செய்யுங்கள்: உங்கள் இணைய சேவையை சரிபார்க்க வேண்டும்.இணையத்தை சரிபார்த்து அது திரும்ப இயக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.
  • உங்கள் வேர்ட்பிரஸ் (WordPress) செருகுநிரல்கள்(Plugins)  மற்றும் தீம்களைச்(Themes) சரிபார்க்கவும் மற்றும் உங்களிடம் சிதைந்த வேர்ட்பிரஸ் தரவுத்தளம் (Corrupted Word Press) இருந்தால் இவையனைத்தையும் சரிபார்க்க வேண்டும்.
  • தவறான பயர்வால் கட்டமைப்பை (Firewall Configuration) கண்டறிந்து சரிசெய்யவும்.
  • உங்கள் ஹோஸ்டிங் வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்.

504 Gateway Timeout Error -ஐ தடுப்பது எப்படி?

  • உங்கள் சர்வர்கலை மேம்படுத்தவும்
  • சுமை சமநிலையை செயல்படுத்தவும்
  • பின்தள சேவைகளை கண்காணித்து பராமரிக்கவும்
  • வழக்கமான பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல்கள்

404 Error பற்றி உங்களுக்கு தெரியுமா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement