How to Get Land Map Online in Tamilnadu
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றினை பற்றி பார்க்கலாம். அதாவது, நம் வீட்டின்/ நிலத்தின் வரைபடத்தை ஆன்லைன் மூலம் பார்த்து பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை இபபதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இக்காலத்தில், சொத்து சம்மந்தப்பட்ட பல பிரச்சனைகள் பெருகிக்கொண்டிருக்கிறது. ஆகையால், நம் நிலத்திற்கான விவரங்களை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். நிலவரைபடம் என்பது வீட்டின் அல்லது நிலத்தின் வரைபடம் ஆகும். இதனை ஆன்லைன் மூலம் எளிமையாக தெரிந்து கொள்ளலாம். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
நில வரைபடம் பார்ப்பது எப்படி.?
- முதலில், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அப்பக்கத்தில் முகப்பு என்பதை கிளிக் செய்து புலப்பட வரைபடங்களை பார்வையிட கிராமம் என்பதை கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு, மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் புல எண் உள்ளிட்ட நிலத்தின் விவரங்களை உள்ளிட்ட வேண்டும்.
- அடுத்து, உட்பிரிவு எண் என்பதை கிளிக் செய்து உங்கள் நிலத்திற்கான உட்பிரிவு எண்ணை உள்ளிடுங்கள். அதாவது, உங்கள் நிலத்திற்கான நில வரைபடம் மட்டும் வேண்டுமென்றால் உங்கள் பட்டாவில் என்ன உட்பிரிவு எண் இருக்கிறதோ அதனை உள்ளிடுங்கள். அப்படி இல்லாமல், உங்கள் நிலத்திற்கு அருகில் உள்ள வரைபடங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் – என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- இப்போது, அங்கீகார மதிப்பை உள்ளிடவும் என்பதை கிளிக் செய்து அருகில் உள்ள கேபட்சா எண்ணை கொடுத்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்.
- சமர்ப்பி என்பதை கிளிக் செய்ததும், புலப்படம் பார்வையிட என்று தோன்றும். அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- அதன் பிறகு, அப்பக்கத்தில் உங்கள் நிலத்திற்கான வரைப்படம் தோன்றும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- அவ்வளவுதாங்க, மிகவும் எளிமையான முறையில் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் உங்கள் நிலத்திற்க்கான நில வரைபடத்தை ஆன்லைன் மூலம் பார்த்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் மின்தடையை முன்னரே கண்டுபிடிப்பது எப்படி
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |