How to Register to Be an Organ Donor in India
இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும், சில பேர் வீட்டில் அதெல்லாம் செய்யாதே உடலில் உள்ள சத்து எல்லாம் போகிவிடும் என்று கூறுவார்கள். சில பேர் மாதத்திற்க்கு ஒரு முறை இரத்த தானம் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதில் அடுத்தபடியாக உடல் உறுப்பு தானம் செய்ய செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு எப்படி செய்வது என்று தெரியாது. இந்த பதிவில் அதற்கான வழிமுறைகள் கொடுப்பட்டுள்ளது. அதனை பற்றி காண்போம் வாங்க..
உறுப்பு தானம் செய்வதற்கான தகுதி:
உடல் உறுப்பு தானம் செய்வதற்க்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பு தானம் செய்ய தகுதியுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். முக்கிய விஷயம் உங்கள் உறுப்புகளின் நிலை இதயம், சிறுநீரகம், நுரையீரல், கார்னியா மற்றும் கணையம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் திசுக்களையும் தானம் செய்யலாம். உயிருள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் கூட சாத்தியமாக உள்ளன, குறிப்பாக சிறுநீரகங்களின் விஷயத்தில், ஒரு சிறுநீரகத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். 18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.
உறுப்பு தானம் செய்வது எப்படி.?
உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டுமென்றால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்று உடல் உறுப்பு தானத்திற்கான விண்ணப்பத்தினை பெற்று கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
என்னால் நேரில் செல்ல முடியாது, ஆன்லைனில் பதிவு செய்ய முடியுமா என்று நினைப்பவர்களுக்கு கீழே உள்ள தகவலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ transtan.tn.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதில் சென்றதும் நீங்கள் டோனர் உறுதி மொழியை ஏற்க வேண்டும். இந்த உறுதிமொழி அட்டையில் பெயர், ரத்தப் பிரிவு, சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள், தோல் போன்ற உறுப்புகளில் எந்த உறுப்பை தானம் செய்ய வேண்டும் போன்ற விவரங்கள் இருக்கும்.
அடுத்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டவர்கள் தங்களின் குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் இறந்த பிறகு உறுப்புகளை எடுத்து செல்வதற்கு வரும் போது குடும்பத்தில் உள்ளவர்கள் மறுத்தால் உறுப்பு கிடைப்பதில் லேட் ஆகுவதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |