இது தெரியாம நுங்கு வாங்காதீங்க..!

Advertisement

நுங்கு எப்படி பார்த்து வாங்க வேண்டும்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நுங்கு எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கக்கூடிய பொருட்களில் நுங்கும் ஒன்று. நாம் செல்லும் இடங்களில் நுங்கு விற்றால் அதனை உடனே வாங்கி விடுவோம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நுங்கு எப்படி வாங்க வேண்டும் என்றே தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் நுங்கு எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம் வாங்க.

நுங்கில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வெயில் காலத்தில் உடலிற்கு மிகவும் நல்லது. அதனால், தான் அனைவரும் வெயில் காலத்தில் நுங்கினை விரும்பி சாப்பிடுவோம். அப்படி நுங்கு வாங்கும்போது நாம் சிலவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

நுங்கு யார் சாப்பிட கூடாது தெரியுமா.?

How to See and Buy Nungu in Tamil:

நுங்கு எப்படி பார்த்து வாங்க வேண்டும்

கோடை காலத்தில் நுங்கு உடலிற்கு ஏராளமான நன்மைகளை தருகிறது என்று, பார்க்கும் இடத்தில் எல்லாம் நுங்கினை வாங்கி சாப்பிட்டு விடுவோம். பொதுவாக, இயற்கையாக எந்தவொரு வேதிப்பொருளை கலப்படம் செய்யாமல் கிடைக்கும் பொருட்கள் எளிதில் கெட்டுவிடும் தன்மை கொண்டது. அவற்றில் ஒன்று தான் நுங்கு. நுங்கு எந்தவொரு கலப்படமும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு பொருள்.

நுங்கினை, வெட்டி அதனை நீண்ட நேரம் வைத்து இருந்தால் அதனை வாங்க கூடாது. நுங்கினை வெட்டி உடனேயே சாப்பிட வேண்டும். முடிந்தவரை காலையில் வெட்டிய நுங்கினை 6 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்.

முற்றிய நுங்கை வாங்க கூடாது. நுங்கை பார்க்கும்போதே அது தடிமனாக எந்தவொரு பிளவும் இல்லாமல் இருந்தால் அது முற்றிய நுங்கு ஆகும். ஆகையால், இதுபோன்று தடிமனாக இருக்கும் நுங்கினை வாங்க கூடாது. 

நுங்கு எப்போதும் பிரஷாக இருக்குமாறு பார்த்து வாங்குங்கள். நல்ல வெள்ளை நிறத்துடன் இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தில் இருந்தால் அந்த நுங்கினை வாங்க கூடாது. அதேபோல், நுங்கு வாசனையும் நன்றாக இருக்க வேண்டும். புளித்த வாசனை போன்ற விரும்பத்தகாத வாசனை இருந்தால் அதனை வாங்க கூடாது.

நுங்கு சாப்பிடும்போது, இனிப்பு சுவையில் இருக்க வேண்டும். அப்படியில்லாமல், புளிப்பு அல்லது கசப்பு சுவையில் இருந்தால், அது கெட்டுபோகி விட்டது என்று அர்த்தம்.

நுங்கில் உள்ள அனைத்து மருத்துவ குணங்களும் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால், இளம் நுங்கை வாங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், நுங்கை தோலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

நுங்கு சர்பத் இந்த வெயிலுக்கு குடிங்க

ஆனால், முதியவர்களும் குழந்தைகளும் நுங்கினை தோலுடன் சாப்பிடும் போது செரிமான பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்புள்ளது. ஆகையால், அவ்வாறு செரிமான பிரச்சனைகள் ஏற்படுமாயின் தோலுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்பாக, நுங்கினை தண்ணீரில் கழுவி சாப்பிட வேண்டும். ஏனென்றால்,  அதில் கண்ணுக்கு தெரியாத தூசுகள் நிறைந்திருக்கும். ஆகையால், எப்போது நுங்கு வாங்கினாலும் அதனை ஒருமுறை தண்ணீரில் கழுவி சாப்பிடுவது நல்லது.

காலை வேளை மற்றும் மதிய வேளைக்கும் இடைப்பட்ட காலத்தில் நுங்கினை வாங்கி சாப்பிட வேண்டும். மதிய நேரத்திற்கு பிறகு நுங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement