Instagram New Update Comment Dislike Button in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட் பற்றி கொடுத்துள்ளோம். உலகின் நான்காவது சமூக வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால், இன்னும் யூசர்களின் வசதிக்கு ஏற்ப புதுப்புது அப்டேட்களை நிறுவனம் கொண்டு வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமின் கமெண்ட் பகுதியில் டிஸ்லைக் ஆப்ஷன் கொண்டு வருவதாக அப்டேட் வெளிவந்துள்ளது.
முன்னதாகவே இன்ஸ்டாகிராம், நீண்ட காலமாக டிஸ்லைக் ஆப்ஷனை டெஸ்ட் செய்துள்ளதாக வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமின் கமெண்ட் பகுதியில் டிஸ்லைக் ஆப்ஷன் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்த உள்ளது. அதனை பற்றி விவரமாக பின்வருமாறு பார்க்கலாம்.
பெண்களுக்கான இன்ஸ்டாகிராம் ID நேம்ஸ்.!
Instagram New Update Comment Dislike Button:
- இன்ஸ்டாகிராமில் போஸ்ட் மற்றும் ரீல் வீடியோக்களில் உள்ள Comment பகுதியில் யூசர்கள் பயன்படுத்தும் விதமாக டிஸ்லைக் ஆப்ஷனைகொண்டு வரும் வகையில் டெஸ்ட் செய்து வருவதாக கூறியிருக்கிறது.
- இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொசேரி அவர்கள், ஒரு த்ரெட்ஸ் பதிவில் இந்த Comment Dislike Button பயனர்களின் உரையாடல்களின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்ப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
- ஃபீடு போஸ்ட் மற்றும் ரீல்கள் என இரண்டிலும் Comment Dislike இடம்பெற்றிருக்கும்.
- இந்த Comment Dislike Button ஆனது, தனிநபர்கள் குறிப்பிட்ட கமெண்ட்டுக்கு தனிப்பட்ட முறையில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த அனுமதிக்கிறது. ஆனால் omment Dislike பட்டனில் மொத்த Dislike எண்ணிக்கை காட்டாது. நீங்கள் குறிப்பிட்ட கமெண்ட்டிற்கு டிஸ்லைக் செய்துள்ளீர்கள் என்பது யாருக்கும் தெரியாத வண்ணம் இருக்கும். இந்த சோதனை கமெண்ட்கள் பிரிவின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று கூறியிருக்கிறார்.
- மேலும், dislike கமெண்ட்களை கமெண்ட் பாக்ஸின் கீழே கொண்டு செல்வதையும் நாங்கள் சோதிக்க உள்ளோம் என்றும் கூறியிருக்கிறார்.
- மேலும், இந்த ஆப்சன் இன்ஸ்டாகிராமில் கமெண்ட்களை மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.
- இன்ஸ்டாகிராமின் டிஸ்லைக் அம்சம் தற்போது டெஸ்டிங் முயற்சியில் மட்டுமே உள்ளது. அனைத்து யூசர்களும் பயன்படுத்தும் வண்ணம் இன்னும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை மெட்டா அறிவிக்கவில்லை.
என்னங்க சொல்றீங்க இந்த Tricks இன்ஸ்டாகிராம்ல இருக்கா..! இது இவ்ளோ நாளா தெரியாம போச்சே..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |