கரையான் புற்று மண் குளியல் நன்மைகள்!
வீட்டில் கரையான் புற்று இருந்தால் வேறு என்ன மருந்து தேவைப்படும் நமக்கு. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், கரையான் புற்று மண்ணில் எக்கச்சக்க நன்மைகள் இருக்கின்றது. கரையான்கள் தங்கள் இருப்பிடத்தை உருவாக்க பயன்படுத்தும் மண் வகைகளில் ஒன்று தான் “கரையான் மண்” என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் வளமானதாக இருப்பதால், தாவர வளர்ச்சிக்கு ஏற்ற மண் வகையாகும். பொதுவாக, கரையான் மண் சிலிக்கா, மணல் மற்றும் களிமண்ணால் ஆனது. அதுமட்டுமின்றி கரையான் மலம் மற்றும் உமிழ்நீர் போன்ற கரிம பொருட்கள் இதில் இருக்கும்.
அப்படிப்பட்ட மண் தான் நமக்கு நிறைய விதங்களில் நன்மைகளை தருகின்றது. உங்களுக்கு கரையான் புற்று மண் நன்மைகள் தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கரையான் புற்று மண் குளியல்
இது உங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும். இந்த மண்ணில் எல்லாம் குளிக்கிறார்களா என்பது கேள்வியாக தான் இருக்கும். நமது தாத்தாக்கள் எல்லாம் சோப்பு போட்டு குளிக்க மாட்டார்கள். ஆற்றில் குளிக்கும் போது அங்கு இருக்கும் மண்ணை போட்டு தான் குளிப்பார்கள். அது போல இந்த கரையான் மண்ணை பயன்படுத்தி குளித்தால் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பார்ப்போம். அதற்கு முதலில் கரையான் புற்று மண் குளியலுக்கு முதலில் நீங்கள் நல்ல கரையான் மண்ணை தேர்ந்தெடுக்கவேண்டும். பின்பு அதனை நன்கு உடைத்துவிட்டு தண்ணியில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு உடம்பு முழுவதும் தேய்த்து சூரிய ஒளியில் அது காயுமாறு பார்த்துக்கொள்ளவும்.
அதன்பிறகு குளிக்க வேண்டும், அப்படி குளித்தால் நமக்கு என்னனா நன்மைகள் கிடைக்கும் என்று கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Karayan Putru Man Nanmaigal

வரும் காலங்களில், நாம் நோயற்ற வளமான வாழ்க்கை வாழ, கரையான் மண் குளியல் மிக சிறந்த ஒன்றாகும். முக்கியமாக இது, தோல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கின்றது.
- கரையான் புற்று மண் குளியலால் செத்துபோன செல்கள் எல்லாம் உடம்பில் இருந்து வெளியேறி புது செல்கள் வளர்வதற்கு உதவி செய்கிறது.
- கண்களுக்கு குளிர்ச்சி தருகின்றது.
- இதில் போலிக் அமிலம் இருப்பதால் நம்மை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
- இயற்கையை விரும்புபவர்கள் ஒரு முறை இந்த கரையான் புற்று மண் குளியல் try பண்ணி பார்க்கலாம்.
வேளாண் பயன்பாடு:
மண்ணின் தளிர்த்தன்மை அதிகரிக்கும்:
- கரையான் புற்று மண் நுண்ணிய தன்மை கொண்டது, மண்ணில் கலந்தால் வளம் அதிகரிக்க உதவுகிறது.
- இது மண்ணை நன்கு பழுத்து, பசுமை வளர்ச்சிக்கு உதவுகிறது.
இயற்கை உரமாக:
- கரையான் புற்று மண்ணில் பல தாதுப் பொருட்கள் உள்ளன.
- இது தாவரங்களுக்கு நல்ல ஊட்டச்சத்து வழங்குகிறது.
பூச்சி விரட்டியாக:
- கரையான் புற்று மண்ணை தண்ணீரில் கலந்து தெளித்தால்,
பூச்சிகளை விரட்ட உதவுகிறது. - இயற்கை பூச்சிக்கொல்லியாக இது செயல்படுகிறது.
மருத்துவ பயன்பாடு:
புண்கள் மற்றும் தோல் பிரச்சினைக்கு:
- கரையான் புற்று மண்ணை சிறிதளவு தேங்காய்எண்ணெயில் கலந்து தடவினால்,
- சிறு புண்கள், தேமல், எரிச்சல் போன்ற தோல் பிரச்சனைகள் குணமாகும்.
உடல் வெப்பத்தை குறைக்கும்:
- புற்று மண்ணை தண்ணீரில் கலந்து உடலில் பூசினால்,
- உடல் வெப்பம் குறையும்.
- உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
கொசு மற்றும் தேனீ கடிக்க:
- கரையான் புற்று மண்ணை கடித்த இடத்தில் தடவினால்,
- வீக்கம் குறைந்து வலி குணமாகும்.
- உடலின் வலியை குறைக்க உதவுகிறது.
ஆன்மீக மற்றும் பாரம்பரிய பயன்பாடு:
பூஜைகளில் பயன்பாடு:
- கிராமங்களில் கரையான் புற்று மண்ணை சில்வேளைகளில் பூஜைகளில் பயன்படுத்துகின்றனர்.
குளிர்ச்சியான வீடுகளை உருவாக்க:
- மண் வீடுகள் கட்டும்போது கரையான் புற்று மண் சேர்ப்பதன் மூலம் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.
அழகு பராமரிப்பு:
முகம் மற்றும் சருமத்திற்கு:
- கரையான் புற்று மண்ணில் இயற்கை தாதுப் பொருட்கள் இருப்பதால்,
- மஞ்சள், தயிர் கலந்து முகத்தில் பூசினால்,
- முகம் பளபளப்பாகும்.
இந்த பதிவின் மூலம் நீங்கள் Karayan Putru Man Nanmaigal அதாவது கரையான் புற்று மண் நன்மைகள் பற்றி முழுவதுமாக தெரிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
| எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |














