எந்த உறுப்பு வழியே உயிர் பிரிந்தால் என்ன அர்த்தம்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், மனிதர்களுக்கு உயிர் பிரியும் வாசல்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம்மில் பெரும்பாலருக்கும் உயிர்போகும்போது நம் உடலில் உள்ள உறுப்புகளின் வழியே தான் போகும் என்பது தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளாலாம்.
மனிதர்களுக்கு உயிர்போகும்போது ஏதேனும் ஒரு உறுப்புகள் வழியே தான் போகும். அப்படி உடலை விட்டு உயிர் பிரியும் வாசல்கள் 11 இருக்கின்றது. அவரவர் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வாசல் (உறுப்பு) வழியாக உயிர் பிரியும் என்று, அகத்தியர் தனது கர்ம காண்டம் நூலில் கூறியுள்ளார். எனவே, என்னென்ன பாவங்கள்/புண்ணியங்கள் செய்தவர்களுக்கு எந்த உறுப்பு வழியே உடலை விட்டு உயிர் போகும் என்று என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உயிர் பிரியும் வாசல்:
1 ஆம் வாசல்:
பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக உடலை விட்டு உயிர் பிரியும். இவ்வாறு பிரியும் உயிர் நேரடியாக நரகத்திற்கு செல்லும்.
2 ஆம் வாசல்:
பாவம் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக உயிர் பிரியும். இந்த உயிர்கள் மறுபிறவியில் காமியாய் திரியும்.
3 ஆம் வாசல்:
பாவம் அதிகமாகவும் புண்ணியம் குறைவாகவும் செய்தவர்களுக்கு நாபி வழியே உயிர் போகும். மறுபிறப்பில் இஸ்டபட்டவனாகவும், நோயாளியாகவும், அங்ககீனமுடையதாகவும் பிறந்து வினையை கழிக்கும்.
4 ஆம் வாசல்:
பாவம் மற்றும் புண்ணியம் இவை இரண்டினையும் சமமாக செய்தவர்களுக்கு உயிர் வாய் வழியாக பிரியும். இவ்வாறு பிரியும் உயிர்கள் மறுபிறப்பில் உணவுப் பிரியர்களாகவும், சாப்பாட்டு ராமர்களாகவும் இருப்பார்கள்.
5 மற்றும் 6 ஆம் வாசல்:
அதிக பாவம் செய்யாதவர்களின் உயிர்கள் இடது, வலது நாசிகள் வழியே தனிதனியாக பிரியும். இவ்வாறு பிரியும் உயிர்கள் மறுபிறப்பில் நற்மணத்தையே விரும்பும்.
7 மற்றும் 8 ஆம் வாசல்:
குறைந்த அளவு பாவம் செய்தவர்களின் உயிர்கள், இடது, வலது செவிகள் வழியே பிரியும். இவர்கள் மறுபிறப்பில் கேள்விச் செல்வம் உடையதாக பிறக்கும்.
9 மற்றும் 10 ஆம் வாசல்:
புண்ணியம் அதிகமாக செய்தவர்களின் உயிர்கள், இடது, வலது கண்கள் வழியே பிரியும். இவ்வாறு பிரியும் உயிர்கள், மறுபிறவியில் கல்வி-செல்வம் பெற்று உயர்வுடன் வாழும். பழி பாவத்தை கண்டு பயந்து வாழும். கடவுள் பக்தியுடன் வாழும்.
11 ஆம் வாசல்:
சிவயோக நெறியில் இருக்கும் உயிர்கள் பிராரப்த கர்மங்களை தனக்கு கொடுக்கப்பட்ட உடல் கொண்டு கழித்து, பல காலங்களாகப் பழகிய யோகப் பயிற்சியின் துணை கொண்டு சுழுமுனை நாடிவழியாக பிராணனை மேல் எழுப்பி, பிரமாந்திர வழியை திறந்து கபால வழியாக ஔிமயமாக உச்சி வாசலூடாக செல்லும். அவ்வாறு சென்ற உயிர் மீண்டும் பிறவாது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |