வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மயோனைஸ் விற்பனைக்கு தடை விதித்த தமிழக அரசு!

Updated On: April 25, 2025 3:20 PM
Follow Us:
mayonnaise banned in tamil nadu in tamil
---Advertisement---
Advertisement

 மயோனிஸ் தடை

இன்றைய கால கட்டத்தில் சாட் கடைகள், சாண்ட்விட்ச், பர்கர், சிக்கன் பார்பிக்யூ, க்ரில் போன்ற உணவுகளில் மைனஸ் இல்லாமல் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடும் உணவுகளில் சுவை அதிகரிப்பதற்காகவே மைனஸ் சேர்த்து சாப்பிடுகிறார்கள். ஆனால் எந்த பொருளையும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எந்த பொருளையும் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு பிரச்சனையை தான் ஏற்படுத்தும். மயோனிஸ் பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கிறது. இவை தனியாகவும் கிடைக்கிறது. உணவிலும் கலந்து கொடுக்கப்படுகிறது. இதனுடைய ருசி சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. இந்த மாயோனிஸ் உணவை விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. அவை எதனால் என்று இந்த பதிவை முழுமையாக அறிந்து கொள்வோம்.

மயோனீஸ் என்றால் என்ன.?

 மயோனிஸ் தடை  

பச்சை முட்டை மற்றும் எண்ணெய், எலுமிச்சை சாறு, வினிகர் போன்றவை கொண்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. மயோனைஸ். மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் போன்ற உணவுகளுக்கு இதனை சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

மைனஸ் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்.! இதை தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடலாமா..! சாப்பிட வேணாமான்னு முடிவு பண்ணிக்கிங்க

இதில் பெரியளவில் ஆரோக்கிய நன்மைகளும் இல்லை. மையோனைஸை ஆலிவ் ஆயில் அல்லது அவகாடோ ஆயில் போன்ற வகையில் ஆரோக்கியமான பொருள்களுடன் தயாரித்தால் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் கிடைக்கும். இவை இதயத்திற்கு நல்லது எனலாம். ஆனால், அதில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மிக முக்கியம். மேலும், இதில் குறைந்தளவில் வைட்டமிண் E இருக்கிறது. இருந்தாலும் இதனை உணவில் எடுத்து கொள்வதன் மூலம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பச்சை முட்டையில் காணப்படும் சால்மோனெல்லா பாக்டீரியா ஆனது முறையாக சமைத்தால் மட்டுமே இந்த பாக்டீரியாவை நீர்த்து போக செய்யும்.

இந்த மயோனீஸில் கலோரி மற்றும் கொழுப்புகள் ஆனது அதிகமாக உள்ளது. ஒரு ஸ்பூன் மயோனீஸ் சாப்பிட்டால் 90 கலோரிகள் கிடைக்கும்.இதனை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்க கூடும். மேலும் கொலஸ்ட்ராலின் அளவை அதிகப்படுத்தி, இதய பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதனால் தான் முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனீஸ்க்கு தமிழ்நாடு அரசானது ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.  சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் படி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மயோனீஸ் விற்பனை செய்வது, சேமித்து வைப்பது, தயார் செய்வது போன்றவற்றிற்கு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.

மேலும் இது போன்ற Information செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Information
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now