பால் எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும் தெரியுமா?

Advertisement

பாலின் காலாவதி தேதி | Expiry Date for Milk in Tamil 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அவசியமான பொருட்களில் ஒன்று பால். காலை தூங்கி எழுவது முதல் இரவு தூங்க செல்வது வரைக்கும் ஒரு நாளுக்கு 3 அல்லது 4 டீ போட்டு குடிக்கும் பழக்கம் பல வீடுகளில் இருக்கும். இதனால், அதிகமான பாலை வாங்கி சேமித்து வைத்து கொள்வார்கள். ஆனால், பாலின் காலாவதி தேதி பற்றி யாரும் அறிந்திருப்பதில்லை. ஆகையால், அதை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு காலாவதி தேதி இருக்கும் என்று அனைவரும் தெரியும். ஆனால் அந்த தேதி தான் என்னவென்று பெரும்பாலானோருக்கு தெரியாது, பாக்கெட்டில் இருக்கும் பொருளுக்கு காலாவதி தேதி இருக்கும் அதை வைத்து நம்மால் அறியமுடியும். ஆனால் பாக்கெட் அல்லாத பொருளுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளுக்கான Expiry Date அதாவது காலாவதி தேதி பற்றி உங்களுக்கு தெரியுமா. எங்களது இணையத்தளத்தில் ஒவ்வொரு பொருளுக்கான காலாவதி தேதி பற்றி தெளிவாக சொல்லி வருகின்றோம். இன்றைய பதிவில் expiry date for milk in tamil அதாவது பாலின் காலாவதி தேதி பற்றி தான் தெளிவாக கூறியுள்ளோம்.

Expiry Date for Milk in Tamil 

இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் பசும் பால் தான் அருந்துவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்காகவே பசும்பால் வாங்குவார்கள்.

Expiry Date for Milk in Tamil 

நீங்கள் இது போல் பால் டிப்போவிலிருந்து பால் கொண்டுவருபவர்களிடன் பால் வாங்குவீர்கள் என்றால், இதன் ஆயுட்காலம் கம்மிதான், இந்த நாட்டு மாட்டுப்பால் தான் மிகவும் சத்து நிறைந்ததாகும்.

காய்ச்சிய பால் ஒரு நாள் வரை கெடாமல் இருக்கும், அதுவே காய்ச்சாத பால் ஒரு நாள் கூட அதனால் தாக்குப்புடிக்க முடியாது. அதனால் தான் பால் வாங்கியவுடன் அதை காய்ச்சி வைத்துவிடுவார்கள். இப்பொழுதெல்லாம் மாலை நேரம் வரும் பாலை வாங்கி நன்கு காய்த்து அதனை fridge-ல் வைத்து மறுநாள் வரை பயன்படுத்திக்கின்றார்கள்.

Bread எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும் என்று தெரியுமா?

பாக்கெட் பால் 

பாலின் காலாவதி தேதி

அதுவே நீங்கள் தின்தோறும் Polythene packaging milk அதாவது பாக்கெட் பால் வாங்குவீர்கள் என்றால் அதன் காலாவதி காலம் (expiry date) ஒன்றிலிருந்து இரண்டு நாட்களாகும்.

Tetra Packet Milk 

Expiry Date for Milk

ஒரு வேலை நீங்கள் Tetra Packet Milk வாங்குவீர்கள் என்றால், இதன் ஆயுட்காலம் 90 நாட்களாகும். ஏனென்றால் இது அதிக வெப்பநிலையில் சூடேற்றப்படுகிறது, இது அனைத்து பாக்டீரியா வித்திகளையும் அழித்து அனைத்து நுண்ணுயிரிகளையும் செயலிழக்கச் செய்து, பாலை நுகர்வுக்கு முற்றிலும் பாதுகாப்பானதாக ஆக்குகிறது.

முட்டையின் Expiry தேதி பற்றி தெரியுமா உங்களுக்கு?

பொதுவாக பாக்கெட் பாலின் காலாவதி தேதி 5-7 நாட்களாகும். அதை தாண்டி அதனை உபயோகிக்கமுடியாது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement