வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாகன ஓட்டிகளே புது ரூல்ஸ் 2025! மாட்டுனா அவ்ளோதான்.!

Updated On: March 20, 2025 12:54 PM
Follow Us:
new traffic fines 2025 in tamil
---Advertisement---
Advertisement

New Traffic Fines 2025 India

நம்மடைய முன்னோர்களின் காலத்தில் வாகனங்கள் என்பது அரிதான விஷயமாக இருந்தது. பெரும்பாலும் மாட்டு வண்டி மற்றும் சைக்கிளை தான் பயன்படுத்தினார்கள். ஏதாவது ஒரு வீட்டில் தான் வண்டியை பார்க்க முடியும். ஆனா இந்த காலத்துல வண்டி இல்லாத வீடுகளே இல்லை. ஒரு வீட்டில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் எல்லாருக்கும் தனியா வண்டி கார் என இருக்கிறது. சாலைகளில் எங்கே பார்த்தாலும், சென்றாலும் வாகனங்களுக்கும், மாசுபாடுகளுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் தினமும் விபத்து நடக்கிறது. விபத்து இல்லாத நாட்களே இல்லை. விபத்துகளை தவிர்ப்பதற்காக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சாலை விதிகளை மீறினால் அபாரதங்களும் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. இந்த அபராதங்கள் ஆனது அதிகப்படுத்தியுள்ளது. அதனை பற்றிய தகவலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

மது போதையில் வாகனம் ஓட்டினால்:

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. இதற்கான அபாரதங்கள் இருந்துமே மக்களிடையே பயம் இல்லை. அபாரதங்களுக்கு பயம் இல்லாவிட்டாலும் தங்களின் உயிர் மேலாவது ஆசை இருக்க வேண்டும். அதுவும் இருக்க மாட்ங்கிது. இதற்கான அபாரதங்களை அரசு உயர்த்தியுள்ளது. மது போதையில் முதல் முறையாக மாட்டினால் 10,000 ரூபாயும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் மீறுபவர்களுக்கு 15,000 ரூபாய் அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

ஹெல்மெட் அணியாமல் போனால்:

வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் போனால் 1000 ரூபாய் அபராதமும், 3 மாதங்களுக்கு உரிமம் இரத்து செய்யப்படும். அதுவே சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்தினால்:

New Traffic Fines 2025 India

வாகனம் ஓட்டும் போது அதில் கவனம் இல்லாமல் போவது முக்கியமான காரணமாக இருக்கிறது. ஒரு கையில் வாகனத்தை ஒட்டி கொண்டும், ஒரு கையில் மொபைலில் பேசி கொண்டு செல்வதும்  தான் காரணமாக இருக்கிறது. இப்படி நீங்கள் போன் பேசிவிட்டு வாகனம் ஓட்டினால் 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

உரிமங்கள்:

வாகனங்களுக்கான உரிமம், உங்களுக்கான உரிமம் இல்லையென்றால் 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றால்:

இரு சக்கர வாகனத்தில் மூன்றுபேர் செல்வது தவறானது. தவறு என்றும் தெரிந்தும் பலரும் இந்த தவறை செய்கிறார்கள். இதற்கு அபராதமாக 1000 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான முறையில் வண்டி ஓட்டுவது, பந்தய முறையில் வண்டி ஓட்டுவது 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

சிக்னல்:

சிவப்பு விளக்கை மீறினால் 5000 ரூபாயும், வாகனத்தில் அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்து சென்றால் 20000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வண்டி ஓட்டினால்:

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வண்டி ஓட்டினால் சட்டத்திற்கு புறம்பான விஷயமாக இருக்கிறது. இதற்கு 25,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். 25 வயது வரைக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.

பழைய அபராதம் vs புதிய அபராதம்:

பழைய அபராதம் vs புதிய அபராதம்

குற்றம்  பழைய அபராதம்  புதிய அபராதம் 
மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ. 1000 to ரூ. 1500 ரூ.10,000 மற்றும் 6 மாதம் சிறை
ஹெல்மேட் இல்லாமல் வாகனன் ஓட்டினால் ரூ.100 ரூ.1000 + 2 மாதங்களுக்கு லைசென்ஸ் பறிக்கப்படும்.
சீட் பெல்ட் அணியமல் வாகனன் ஓட்டினால் ரூ.500 ரூ.5000
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம்  ஓட்டினால் ரூ.500 ரூ.5000
டூ வீலரில் 3 பேர் சென்றால் ரூ.100 ரூ.1,000
இன்சூரன்ஸ் இலலாமல் இருந்தால் ரூ.200 to ரூ.400 ரூ.2000 + 3 மாதம் சிறை
பயமுறுத்தும் வகையில் வண்டி ஓட்டினால் ரூ.500 ரூ.5000
ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.1000 ரூ.10000
ரேஸ் அல்லது வேகமாக சென்றால் ரூ.500 ரூ.5000
ஓவர் லோடு ஏற்றி சென்றால் ரூ.2000 ரூ.20000
சிக்னலில் நிற்காமல் சென்றால் ரூ.500 ரூ.5000
18 வயதுக்கு கீழ் வண்டி ஓட்டினால் ரூ.2500 ரூ.25000+3 வருடம் சிறை, 25 வயது வரைக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now