Packaged Ginger Garlic Paste is Good or Not
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். பொதுவாக, சமையலறையில் நமக்கு பல வேலைகள் இருந்தாலும், பெரிய வேலையாக நாம் நினைப்பது இஞ்சி பூண்டு உரித்து பேஸ்ட் செய்வதை தான். அனைத்து விதமான உணவுகளிலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கப்படுகிறது. அதனால், தினமும் இஞ்சி பூண்டு பேஸ்ட் தேவைப்படும். இதனால், வீட்டில் உள்ள பெண்கள் ஒரு வாரத்திற்கு தேவையான இஞ்சி பூண்டு பேஸ்ட்டினை மொத்தமாக செய்து ப்ரிட்ஜில் சேகரித்து வைப்பார்கள். அதுவே, வெளியில் வேலைக்கு செல்பவர்கள் கடைகளில் பாக்கெட்டில் விற்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை தான் வாங்கி பயன்படுத்துவார்கள்.
இன்னும் சில பேர், இஞ்சி பூண்டின் விலை மார்க்கெட்டுகளில் அதிகமாக இருக்கிறது என்பதால், கடைகளில் 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் கிடைக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை வாங்கி பயன்படுத்துவார்கள். இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலானவர்கள் நேரமும் வேலையும் மிச்சம் ஆகும் என்பதால் கடைகளில் விற்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை கடைகளில் வாங்கி பயன்டுத்தி வருகிறார்கள். இது முற்றிலும் நமக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.
ஆறு மாதம் ஆனாலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கெட்டுப்போகாமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!
இஞ்சி பூண்டு பாக்கெட் பேஸ்ட்:
மார்க்கெட்டில் இன்றைக்கு பூண்டின் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதேபோல், இஞ்சியின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. இது நம் அனைவருக்குமே தெரியும். இஞ்சி பூண்டின் விலை மார்க்கெட்டில் உயர்ந்தாலும், குறைந்தாலும் இஞ்சி பூண்டு பேஸ்டின் விலை மட்டும் குறையாமல் இருக்கிறதே..அதெப்படி.? என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..?
ஏனென்றால், நாம் கடைகளில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் இஞ்சி பூண்டே இருக்காது. அதற்கு பதிலாக, முட்டைகோஸ் மற்றும் பூசணிக்காய் கலவை தான் இருக்கும். அதாவது, முட்டைகோஸ் மற்றும் பூசணிக்காய் பேஸ்ட். இதில், பெரும்பாலும் முட்டைகோஸ் மற்றும் பூசணிக்காய் தான் இருக்கும். பேருக்காக மட்டும் இந்த பேஸ்ட்டில் சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து கலந்து, அது சுவையாக இருப்பதற்கும் கெடாமல் இருப்பதற்கும் மற்றும் வாசனையாக இருப்பதற்கும் ஏற்றவாறு ஆயில், உப்பு மற்றும் எசன்ஸ் சேர்க்கப்பட்டு இஞ்சி பூண்டு பேஸ்டாக விற்பனைக்கு வருகிறது.
பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியும் பூத்து குலுங்க 1 துண்டு இஞ்சி போதும்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |