பல்லி எச்சமிட்டால் என்ன பலன்.?

Advertisement

 Palli Echam Palangal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பல்லி எச்சமிட்டால் என்ன பலன் பலன் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, சில நேரங்களில் இரவில் தூங்கும்போது பல்லி எச்சம் இட்டால் வாயின் ஓரங்களில் புண் வரும் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், இதனை பலரும் தவறான ஒன்று கூறுகிறார்கள். நம் முன்னோர்கள் பல்லி முகத்தில் எச்சம் இட்டால் தான் இப்படி வாயின் ஓரத்தில் புண் வரும் என்று சொல்லி சென்றுள்ளார்கள். அதனையே நாமும் நம்பி கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமில்லாமல், பல்லி விழும் பலன் போலவே, பல்லி இடும் எச்சத்திற்கும் பலன் இருக்கிறது என்று எண்ணி நாம் அனைவரும் பல்லி விழும் எச்சத்திற்கு பலனை தேடி கொண்டிருக்கிறோம். எனவே, பல்லி எச்சம் இடுவது உண்மையா.? இல்லை இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பல்லி எச்சம் பலன்கள்:

பல்லி எச்சம் பலன்கள்

பல்லிக்கு மனிதனை போன்று மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதற்கு தனி தனி உறுப்பு கிடையாது. மேலும், பல்லி தண்ணீர் அருந்துவதும் இல்லை. நாக்கு வறண்டு இருக்கும் நேரத்தில் மட்டுமே, எப்போதாது நாக்கை நீரில் நனைத்து கொள்ளுமாம். அதனால், பல்லிக்கு சிறுநீர் அதிகம் வெளியேறுவதில்லை. உடம்பில் இருக்கும் குறைவான சிறுநீரும், யூரிக் அமிலமாக மாறிவிடும். இவ்வாறு இதன் சிறுநீர் யூரிக் அமிலமாக மாறி வெள்ளை நிற படிகமாக மாறிவிடும். அதனால் தான் மலம் கழிக்கும்போது, கருப்பு நிற மலத்துடன் வெள்ளைநிற படிகத்தில் அதன் சிறுநீரும் சேர்ந்து வெளியேறும். இதனால் தான் பல்லியின் மலம் ஆனது, கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.

இபப்டி இருக்கும் நிலையில், நமக்கு வாயின் ஓரங்களில் வரும் புண் அல்லது கொப்பளங்களுக்கு என்ன காரணம். வாருங்கள் அதனையும் தெரிந்துகொள்ளலாம்.

சில நேரங்களில் காலையில் எழுந்ததும், சிலருக்கு வாய்ந்த ஓரங்களில் புண்/கொப்புளங்கள் ஏற்பட்டு இருக்கும். இதனால், அந்த இடம் மிகந்த எரிச்சல் மற்றும் வலியுடன் இருக்கும். இதற்கு பல்லி எச்சம் தான் காரணம் என்று கூறுவார்கள். அதாவது, பல்லி முகத்தில் எச்சம் இட்டு இருந்தால் தான் இப்படி வாயின் ஓரங்களில் கொப்புளம் வரும் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால், இது தவறான தகவல்/காரணம் என்று சொல்லப்படுகிறது. வாயின் ஓரங்களில் புண்கள் வருவதற்கு உண்மையான காரணம் என்னெவென்றால், Herpes simplex virus (HSV) என்ற வைரஸ் கிருமி தான்.

பல்லி எச்சம் குணமாக வீட்டு வைத்தியம்

அதாவது, Herpes simplex virus (HSV) வைரஸ் கிருமி ஆனது, எப்போதும் அனைவரது உடலிலும் இருக்கும். நம் உடலில் எப்போதெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ அப்போது, Herpes simplex virus (HSV) வைரஸ் கிருமி ஆனது, ஆக்டிவேட் ஆகி, இதுபோன்று வாயின் ஓரங்களில் கொப்புளங்களை ஏற்படுத்துகிறது. இது, உடலில் Herpes simplex virus (HSV) வைரஸ் கிருமி அதிகரித்து விட்டது என்பதற்கான அறிகுறியும் கூட. இந்த வைரஸின் தாக்குதல் அதிகமாக இருந்தால் தாடை அல்லது கழுத்து பகுதிகளில் உருண்டை போன்ற புடைப்புக்களை ஏற்படுத்தி வழியையும் ஏற்படுத்துகிறது. மேலும், காய்ச்சலையும் ஏற்படுத்துகிறது.

எனவே, வாயின் ஓரங்களில் மற்றும் உதடுகளில் கொப்புளங்கள்/புண்கள் போன்றவை இருந்தால் Herpes simplex virus (HSV) வைரஸ் கிருமியின் தாக்கம் என்பதை நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். இது ஏற்பட்டு 10 அல்லது 15 நாட்களில் சரியாகிவிடும். அப்படி சரியாகாமல் இருந்தால் மருத்துவரை சென்று பார்க்கவும். இந்த பிரச்சனை வராமல் இருக்க நாம் வைட்டமின் c உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனவே , உடலில் பல்லி விழுந்தால் அதற்கு ஆன்மீக ரீதியாக பலன்கள் உண்டு. ஆனால், பல்லி இடும் எச்சத்திற்கு எந்த பலனும் இல்லை. பல்லி எச்சம் இட்டதினால் தான் வாயின் ஓரங்களில் புண் தோன்றுகிறது என்பதையும் நம்ப வேண்டாம்.

பல்லி கனவில் வந்தால் என்ன பலன்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement