போலியோ சொட்டு மருந்து முகாம் 2024 அறிவிப்பு

Advertisement

Polio Drops Date 2024 Date in Tamil Nadu

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். நாம் அனைவருமே குழந்தை பருவத்தில் சொட்டு மருந்தை சுவைத்து இருப்போம். இந்த ஆண்டு சொட்டு மருந்து எப்போது போடுகிறார்கள் என்று தெரியும். பெற்றோர்கள் அனைவரும் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சொட்டு மருந்து எப்போது போடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

போலியோ வைரஸ் என்பது நம் உடலின் தொண்டை, குடல் பகுதியில் தங்கியிருக்கும் மிகவும் மோசமான கிருமி ஆகும். இது சளி, மலம் மற்றும் தும்மல் இருமல் போன்றவற்றின் மூலம் பிறருக்கு பரவக்கூடியது. இதை தடுக்க கண்டுபிடிக்கப்பட்டதே போலியோ சொட்டு மருந்து ஆகும்.

போலியோ சொட்டு மருந்து முகாம் 2024:

போலியோ சொட்டு மருந்து முகாம் 2024

தமிழகத்தில் மார்ச் 03 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 03.03.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மார்ச் 3 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இதனால் பெற்றோர்கள் தங்கள் 5 வயத்திற்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட வேண்டும்.

குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..!

முகாம் மையம்:

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் என தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாளில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு  யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் உறுதுணையாக உள்ளன.

போலியோ சொட்டு மருந்து முகாம் பற்றிய சில விவரங்கள்:

அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முன்பு  சோப்பு கொண்டு கை கழுவது (Sanitizer) அவசியம்.

போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகத்தில்  தொடர்ந்து நடைபெறுவதால் 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இதனால், பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கு மார்ச் 03 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து போட மறக்காதீர்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement