பொங்கல் போனஸ் 2025.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா.?

Advertisement

Pongal Bonus Go 2025 in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பொங்கல் போனஸ் அரசு அறிவித்துள்ளது என்பதை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸை அறிவித்துள்ளது. அரசு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு 2023-2024-ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பணியாளர்கள் யார் யாருக்கு எவ்வளவு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். படித்து பயனடையுங்கள்.

ரேஷன் கடையில் வழங்கப்படும் பொங்கல் பரிசு பொருட்கள் 2025 .! தகுதியானவர்கள் யார்.?

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு 2025:

 pongal bonus 2025 government order

  • தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
  • அரசு பணியில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் (C & D Group) சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 வரை பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறுவோருக்கு 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோன்று, 2023-2024-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • “சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் வைக்க நல்ல நேரம் 2025

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement