Pongal Gift in Ration Shop 2025 in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டில் தமிழக அரசு பொங்கலுக்கு என்னென்ன பொருட்கள் வழங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் பொங்கல் பரிசு பொருட்களை வழங்க அரசு தயார் நிலையில் உள்ளது. இதற்கான டோக்கன் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடவேண்டும் என்பதற்கான தமிழக அரசு பொங்கல் பரிசுகளை வழங்கி வருகிறது. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை மூலம் ஒவ்வொரு குடும்பமும் பொங்கல் பரிசு பொருட்களை பெற்று கொள்ளலாம்.
பொங்கல் போனஸ் 2025.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா.?
பொங்கல் பரிசு தொகுப்பு 2025 பொருட்கள்:
முக்கிய விவரங்கள்
திட்டம் | ரேஷன் கடையில் பொங்கல் பரிசு 2025 (Pongal Gift In Ration Shop) |
வெளியீட்டு தேதி | ஜனவரி 3, 2025 |
பயனாளிகள் | தமிழக குடிமக்கள் |
மொத்த பயனாளிகள் | 2,20,94,585 ரேஷன் கார்டுதாரர்கள் |
பயன்முறை | வீட்டுக்கு வீடு விநியோகம் |
பரிசு பொருட்கள் | வேஷ்டி சேலை உட்பட 21 அத்தியாவசிய பொருட்கள் |
தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்க உள்ளது. அதில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், ஒரு முழு கரும்பு மற்றும் இதரப்பொருட்கள் வழங்கப்படும். இதுதவிர இலவச வெட்டி, சேலை வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல், ரூ.1000 பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. 2,20,94,585 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவார்கள்.
இதற்காக தமிழக அரசு மொத்தம் ரூ.249 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. 9 ஜனவரி 2025 முதல் 13 ஜனவரி 2025 வரை பரிசு பொருட்கள் வழங்கப்படும். ரூபாய் 1000 ரொக்கத் தொகை உட்பட மொத்தம் 21 அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.
ஜனவரி 09 ஆம் தேதி முதல் வீடு வீடாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். பொங்கலுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, கோதுமை, கரும்பு உள்ளிட்டவைகளுடன் ₹1000 நிதியுதவி வழங்குவதே தமிழக அரசின் பொங்கல் பரிசை வழங்கும் முக்கிய நோக்கமாகும்.
Eligibility for Pongal Gift in Tamil Nadu:
கடந்த முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து மற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |