பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 ஆரம்பம் மற்றும் முடிவு தேதி.! மிஸ் பண்ணிடாதீங்க.!

Advertisement

Pongal Parisu Thoguppu Date 2025 Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை வழங்கப்படும் என்பதை கொடுத்துள்ளோம். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடவேண்டும் என்பதற்கான தமிழக அரசு பொங்கல் பரிசுகளை வழங்கி வருகிறது. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை மூலம் ஒவ்வொரு குடும்பமும் பொங்கல் பரிசு பொருட்களை பெற்று கொள்ளலாம்.

ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகையை வழங்கி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பரிசுகளை வழங்க உள்ளது. இந்த பொங்கல் பரிசில் 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படவுள்ளது. மேலும், வேஷ்டி மற்றும் சேலையும் வழங்கப்படும். பொங்கல் பரிசு ஆனது, எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை வழங்கப்படும் என்பதை நாம் அனைவருமே தெரிந்துகொள்ள விரும்புவோம். ஆகையால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ரேஷன் கடையில் வழங்கப்படும் பொங்கல் பரிசு பொருட்கள் 2025 .! தகுதியானவர்கள் யார்.?

பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 ஆரம்பம் மற்றும் முடிவு தேதி:

 ரேஷன் கடைகள் வாயிலாக ஜனவரி 09 ஆம் தேதி முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுளள்ளது. ஜனவரி 9 முதல் விநியோகம் தொடங்கவுள்ளது.  

பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 ஆரம்பம் மற்றும் முடிவு தேதி

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஜனவரி 09 ஆம் தேதி தொடங்கி வைத்துள்ளார். ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு மட்டுமின்றி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு 2025, பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு ஜனவரி 03 ஆம் தேதி முதல், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் உருவப்படம் பொறிக்கப்பட்ட கைப்பையில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று, சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கி வைக்க உள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படவுள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேஷ்டி சேலையும் வழங்கப்படவுள்ளது.

2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்கள்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement