RTE Rules in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் RTE Rules in Tamil பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. RTE பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். RTE என்பதன் விரிவாக்கம் Right to Education என்பதாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கும் கல்விக்கான உரிமைச் சட்டம் ஆகும். இச்சட்டம் 2009 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 04 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் அணைத்து மாணவர்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமை (RTE) ஆனது, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தரமான முறையான மற்றும் சமமான கல்வியை அளிக்கிறது. அதனை பற்றிய விவரங்களை பின்வருமாறு விவரமாக பார்க்கலாம் வாங்க.
RTE தமிழ்நாடு இலவச கல்வி சேர்க்கைக்கு எப்படி அப்ளை செய்வது..? முழு விவரம் இதோ..!
RTE Rules and Regulations in Tamil:
- Right to Education சட்டம் ஆனது, 6 முதல் 14 வயதுடைய ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்குகிறது. இச்சட்டம் ஆனது, தனியார் நர்சரி , பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் குழந்தைகளுக்கு 25% இடங்களை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
- தனியார் பள்ளிகளில் பொருளாதார நிலை அல்லது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அடிப்படையின் மூலம் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். இது அனைத்து அங்கீகரிக்கப்படாத பள்ளிகளையும் நடைமுறையில் இருந்து தடைசெய்கிறது.
- தொடக்கக்கல்வி முடியும் வரை எந்தவொரு குழந்தையும் இடையில் தடுத்து நிறுத்தப்படவோ, வெளியேற்றப்படவோ, போர்டு தேர்வில் தேர்ச்சி பெறவோ கூடாது என்றும் சட்டம் கூறுகிறது.
- அதுமட்டுமில்லாமல், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை சம வயதுடைய மாணவர்களுக்கு இணையாக உயர்த்த இச்சட்டத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஒரு குழந்தை கல்வியாண்டின் தொடக்கத்தில் அல்லது பரிந்துரைக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் ஒரு பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.
- கிராமப்புறங்களில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாணவர்களுக்கும் நகர்புறத்தில் இருந்தது 5 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்களுக்கும் சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் இட ஒதுக்கீடு உண்டு.
- LKG சேரும் குழந்தைகள் 3 வயது முதல் 4 வயது முடியாமலும் இருக்க வேண்டும்.
- 25% இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் உள்ள உள்ள சீட்டுகளின் எண்ணிக்கைக்கும் ஏற்ப குழுக்கள் முறையில் சீட் வழங்கப்படும்.
- தாய் அல்லது தந்தை என யாரோ ஒருவரை இழந்த குழந்தைக்கும், பெற்றோர்கள் மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் குழந்தைகளுக்கும் குலுக்கல் முறையில் இல்லாமல் நேரடியாக அட்மிஷன் வழங்க வேண்டும் என்று விதி கூறுகிறது.
- சீட் கிடைக்காதவர்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு ஏதாவது அட்மிஷன் நிரப்பப்படாமல் காலியாக இருந்தால் அவர்களுக்கு வரிசை அடிப்படையில் அட்மிஷன் வழங்கப்படும்.
- குழந்தையின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவை விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் ஆகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.