சிங்கப்பூரின் தலைநகரம் எது தெரியுமா? Singapore Capital Name in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் சிங்கப்பூரின் தலைநகரம் எது.. மற்றும் சிங்கப்பூர் பற்றிய சில தகவல்களை பற்றி இங்கு நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க. சிங்கப்பூர் அல்லது சிங்கப்பூர் குடியரசு என்பது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது.
சிங்கப்பூர் தீவை ஜொகூர் நீரிணை, மலேசியாவில் இருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீரிணை இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும். மிகக் குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. நிலச் சீரமைப்பு மூலம் கூடுதலான நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. 1819-ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது?
சிங்கப்பூர் தலைநகரம் எது?
- விடை: சிங்கப்பூர்.
- சிங்கப்பூர் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் தமிழ், மலாய், மாண்டரின் மற்றும் ஆங்கிலம் ஆகும்.
- சிங்கப்பூரின் பொருளாதாரம் ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரமாக கருதப்படுகிறது.
- சிங்கப்பூர் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பை அடிப்படையாக கொண்டுள்ளது.
சிங்கப்பூர் பற்றிய சில தகவல்கள்:
அனைத்து பேருந்துகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை. ஓட்டுனர் மட்டுமே உண்டு, நடத்துநர் கிடையாது. முன்கட்டண அட்டை பயன்படுத்த வேண்டும் (ATM அட்டை போல), ஏறும் போதும் இறங்கும் போதும். பயண சீட்டு கிடையாது. முன்கட்டண அட்டையைப் பயன்படுத்தாதவர்கள் அல்லது எடுக்க மறந்து வந்தவர்கள் ஓட்டுனர் அருகில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் பண நோட்டுகளை/ காசுகளைப் போட்டுப் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
ஆட்சி மொழியில் ஆங்கிலம் மாண்டரின் மலாய் மற்றும் தமிழ் உள்ளது. எனவே தமிழிலும் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்வார்கள். எந்த அறிவிப்பு எழுதி இருந்தாலும் 4 மொழியிலும் எழுதப்பட்டு இருக்கும்.
சிங்கப்பூரிலேயே மிகவும் பழைமையான இடங்களில் லிட்டில் இந்தியாவும் ஒன்று. இந்த லிட்டில் இந்தியாவில் இருக்கும் போது நாம் வேறு ஒரு நாட்டில் இருக்கும் உணர்வே இருக்காது, சென்னை வீதிகளில் சுற்றி கொண்டு இருப்பது போலவே இருக்கும், எங்கு நோக்கினும் நம்மவர்களே இருப்பார்கள்.
சிங்கப்பூர் சுற்றுலா வரும் அனைத்து வெளிநாட்டினரும் லிட்டில் இந்தியா கண்டிப்பாக வருவார்கள். இங்கு தீபாவளி பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும்
இங்கு பிரபலமான அம்மன், பெருமாள் கோவில் மற்றும் மசூதி உண்டு, இவை தவிர சிங்கை முழுவதும் பல கோவில்கள் உள்ளன.
சிங்கப்பூரில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை உள்ளது, இதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே புகைபிடிக்க அனுமதி.
சிங்கப்பூரில் Condo என்ற தனியார் குடியிருப்புகள் மற்றும் HDB (Housing Development Board) என்ற அரசால் கட்டி கொடுக்கப்படும் குடியிருப்புகள் உள்ளன.
இதில் condo வகை குடியிருப்புகள் வாடகை மிக அதிகம் குறைந்தபட்சமே 3000 வெள்ளி இருக்கும்.
இங்கு நீச்சல் குளம், உடற் பயிற்சி நிலையங்கள், விளையாட்டு இடங்கள் என்று சகல வசதிகளுடன் இருக்கும். பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகம்.
HDB குடியிருப்புகள் அரசால் கட்டி கொடுக்கப்பட்டு பின் பொதுமக்களுக்கு விற்கப்படும்.
இதை பொது மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கோ அல்லது வாடகைக்கு விடுவதற்கோ வாங்குவார்கள். நடுத்தர மக்கள் இந்த வகை குடியிருப்புக்களை பயன்படுத்த முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழக பெண் விடுதலை போராட்ட வீரர்கள்..!
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |