Singapore 1 Dollar in Indian Rupees in Tamil
அந்த காலங்களில் பணம் என்பது இல்லை.. தங்களிடம் இருக்கும் பொருட்களின் மதிப்பை பொறுத்து அதற்கு தகுந்தது போல் பண்டமாற்று முறையை கடைபிடிக்கப்பட்டது. பின்பு தங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த ஆரம்பித்தன. அதனை தான் நாம் தற்பொழுது பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு ஆகும். இந்த பணத்தின் மதிப்பானது ஒவ்வொரு நாடுகளுக்கும் மாறுபடும். அந்த வகையில் இன்று நாம் சிங்கப்பூரின் 1 டாலரின் இந்திய மதிப்பு எவ்வளவு என்பதை பற்றி தான் நாம் தெரிந்துகொள்ள போகிறோம் சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து தகவலை தெரிந்துகொள்வோம்.
சிங்கப்பூர் 1 டாலர் இந்திய மதிப்பு:
சிங்கப்பூரின் டாலர் மதிப்பு என்பது மாறிக்கொண்டே இருக்கும். ஆக தற்பொழுது சிங்கப்பூரின் ஒரு டாலரின் இந்திய மதிப்பு 61.71 ரூபாய் ஆகும்.
சிங்கப்பூர் வெள்ளி என்பது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் நாணயமாகும். இந்த நாணயத்தை சிங்கப்பூர் தவிர புரூணையிலும் உபயோகப்படுத்த முடியும். இந்நாணயம் $ அல்லது S$ ஆகிய குறியீடுகளால் குறிக்கப்படும்.
சிங்கப்பூர் டாலர் இந்திய மதிப்பு | |
சிங்கப்பூர் 1 டாலர் | 61.72 ரூபாய் |
சிங்கப்பூர் 100 டாலர் | 6,171.35 ரூபாய் |
சிங்கப்பூர் 10,000 டாலர் | 6,17,134.70 ரூபாய் |
சிங்கப்பூர் 10,00,000 டாலர் | 6,17,13,470.00 ரூபாய் |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிங்கப்பூரின் தலைநகரம் எது தெரியுமா?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |