Special Train For Pongal 2025 Time Table
பொங்கல் வந்துட்டாளே வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் மக்கள் அனைவரும் அவர்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் பொங்கலை சிறப்பிப்பார்கள். வெளி ஊர்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் அனைவரும் பொங்கல் விழாவிற்கு சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். பொதுவாகவே விடுமுறை நாட்கள் என்றால் ரயில்கள் முன் பதிவிற்கு டிக்கெட் பெறுவது கடிமான ஒன்று. பண்டிகை காலத்தில் முன் பதிவு செய்து ஊருக்கு செல்வது மிகவும் கடிமான செயல் என்பதால் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளது. இன்றைய பதிவில் தெற்கு ரயில்வே இயக்கும் சிறப்பு ரயிலின் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
Pongal Vaikka Ugandha Neram 2025
பொங்கல் விழா:
பொங்கல் விழா மூன்று நாட்கள் கொண்டாடபடுகிறது போகி பண்டிகை, உழவர் திருநாள் பண்டிகை, மாட்டு பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் பண்டிகை. பொங்கல் அன்று மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்தது பொங்கலை கொண்டாடுவார்கள். மாட்டு பொங்கல் அன்று அனைவரும் மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் வைத்து மாலை அணிவித்து வழிபடுவார்கள். காணும் பொங்கல் அன்று மக்கள் அனைவரும் உறவினர்களை சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்வார்கள்.
சிறப்பு ரயில்கள்:
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை – நாகர்கோவில்:
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 12, 19ம் தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (ரயில் எண் 06089) மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 13, 20ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
நிற்கும் நிலையங்கள்:
இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றடையும்.
திருநெல்வேலி – தாம்பரம்:
திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 12, 19,26ம் தேதிகளில் மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண் 06092) மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 13, 20, 27ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து (ரயில் எண் 06091) மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
நிற்கும் நிலையங்கள்:
இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழகடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும்.
தாம்பரம் – கன்னியாகுமரி:
தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ஜனவரி 13ம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண் 06093) மறுநாள் மதியம் 12:30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 14ம் தேதி மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
நிற்கும் நிலையங்கள்:
இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.
ராமநாதபுரம் – தாம்பரம்:
ராமநாதபுரத்தில் இருந்து ஜனவரி 10, 12, 17ம் தேதிகளில் மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண்- 06104) மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 11, 13, 18ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5. 15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.
நிற்கும் நிலையங்கள்:
இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும்.
தாம்பரம் – திருச்சி:
தாம்பரத்திலிருந்து ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ம் தேதிகளில் மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ஜன்சதாப்தி அதிவிரைவு ரயில் (ரயில் எண் 06191) இரவு 11:35 மணிக்கு திருச்சி சென்றடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரயில் அதே நாள்களில் திருச்சியில் இருந்து காலை 5:30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
நிற்கும் நிலையங்கள்:
இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடையும்.
Pongal Gift in Ration Shop 2025 in Tamil
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |