Speed Typing Tips
இன்றைய காலத்தில் படிக்கின்ற இளைஞர்கள் சிஸ்டம் சார்ந்த வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது. இதற்காக சிஸ்டம் சார்ந்த வேலைக்கு செல்வதற்கான படிப்புகளை தான் படிக்கிறார்கள். Computer Course -க்கும் செல்கிறார்கள். ஒருவழியாக படித்து சிஸ்டம் வேலைக்கு சென்றாலும் அங்கு வேகமாக டைப் செய்வது அவசியமானது. சில பேர் டைப்பிங் கிளாசுக்கு சென்றிருப்பார்கள். அதனால் வேகமாக டைப் செய்வார்கள். வேலைக்கு போன போது டைப்பிங் கிளாஸ் சென்றிருக்கிலாமோ என்று கவலை ஏற்படும். அவர்கள் எல்லாம் கவலை அடையய தேவையில்லை. இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் டைப்பிங் ஸ்பீடு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
Speed Typing Test Online With Finger:
Keyboard-ல் டைப் செய்வதற்கு விரல்கள் தான் முக்கியமானதாக இருக்கிறது. இந்த விரல்களை எந்த லெட்டரில் வைத்து டைப் செய்கிறோம் என்று இருக்கிறது. அதனை வைத்து தான் வேகமாக டைப் செய்ய முடியும்.
இடது கை:
இடது கையில் சுண்டி விரலானது Q ,A, Z என்று எழுத்துக்களை டச் செய்து இருக்க வேண்டும்.
மோதிர விரலானது W,S,X என்ற எழுத்துக்களை டச் செய்து இருக்க வேண்டும்.
நடு விரல் E,D,C என்று எழுத்துக்களில் இருக்க வேண்டும்.
ஆள்க்காட்டி விரலானது RT, FG, VB என்று எழுத்துக்களில் இருக்க வேண்டும்.
வலது கை:
வலது கையின் ஆள்க்காட்டி விரலானது YU, HJ, NM எழுத்துக்களில் விரல்களை வைத்திருக்க வேண்டும்.
நடு விரல் I,K , என்ற எழுத்துக்களில் வைத்து டைப் செய்ய வேண்டும்.
மோதிர விரல் O,L,R என்ற எழுத்துக்களில் விரல்களை வைத்திருக்க வேண்டும்.
சுண்டி விரல் P , . / போன்ற எழுத்துக்களில் உள்ளவாறு விரலை வைத்து கொள்ள வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள எழுத்துக்களில் வைத்து விரல்களை வைத்து டைப் செய்வதன் மூலம் வேகமாக டைப் செய்ய முடியும். புதிதாக டைப் செய்கிறவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். தினமும் இதே போல் செய்வதனால் பழகி விடும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |