Vaikunta Ekadasi 2025 Tickets Release Date Online And Offline
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருமலை திருப்பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோபதி வைகுண்ட ஏகாதசி நிகழ்வை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் எப்போது வழங்கப்படும். எப்படி புக்கிங் செய்வது உள்ளிட்ட பல விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வைகுண்ட ஏகாதசி 2025 சிறப்பு தரிசன நுழைவுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு டிக்கெட் எப்போது என்பதை எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் பக்கிங் தேதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று (டிசம்பர் 18) வெளியிட்டுள்ளது.
2025 வைகுண்ட ஏகாதசி, திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு எப்போது.?
Vaikunta Ekadasi Tirumala Darshan Tickets 2025 in Tamil:
- ஸ்ரீவாணி டிக்கெட்கள் – டிசம்பர் 23ம் தேதி காலை 11 மணிக்கு
- ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் – டிசம்பர் 24 காலை 11 மணிக்கு
- எஸ்எஸ்டி டோக்கன்கள் திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்திலும் வழங்கப்படும்.
- டிசம்பர் 10 முதல் 19 வரை சாமி தரிசனம் செய்வதற்கான எஸ்எஸ்டி டோக்கன்கள் திருப்பதியில் எம்ஆர் பள்ளி, ஜிவகோனா, ராமா நாயுடு பள்ளி, ராமச்சந்திர புஷ்கரிணி, இந்திரா மைதானம், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் திருமலையில் உள்ள கெளஸ்துபம் ரெஸ்ட் ஹவுஸ் ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளன.
How to Book Vaikunta Ekadasi Tickets 2025 Online in Tamil:
- முதலில்,திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tirumala.org என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- தரிசன தேதிகள் மற்றும் நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது உள்நுழைந்த பிறகு, யாத்திரை இடம், தரிசன தேதி ஆகியவையை தேர்ந்தெடுத்து கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து தங்குமிடங்களை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும். தரிசன டிக்கெட்டுகளுக்கு கூடுதலாக, யாத்ரீகர்கள் திருமலையில் தங்குவதற்கான தங்குமிடங்களை முன்பதிவு செய்யலாம். தங்குமிடங்களை 1 முதல் 120 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யலாம். ஆனால் ஒரு பரிவர்த்தனைக்கு ஒரு முன்பதிவு மட்டுமே அனுமதிக்கப்படும்.
- இறுதியாக பணம் செலுத்த வேண்டும். கிரெடிட், டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் இதுபோன்றவற்றில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து பணம் செலுத்தலாம்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உங்களுக்கு MSG வரும்.
- இந்த டிக்கெட் உறுதிப்படுத்தல் பக்தரின் மொபைல் அல்லது மெயில் ஐடிக்கு வந்து சேரும். பக்தர்கள் அன்றைய தினம் தரிசனத்திற்குச் செல்லும்போது, பயணச்சீட்டை அச்சிட வேண்டும் அல்லது எளிதாக அணுகும் வகையில், பயணச்சீட்டை மொபைலில் சேமிக்க வேண்டும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |