எல் நினோ என்றால் என்ன
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் அனைவருமே EL Nino என்ற வார்த்தையை அறிந்து இருப்போம். ஆனால், அதனை பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். ஒவ்வொரு இயற்கை பெரிதாக்கும் பின்னால் EL Nino என்பது இருக்கும். செய்திகளிலும் செய்தித்தாளில் EL Nino என்று குறிப்பிட்டு இருப்பார்கள். எனவே, EL Nino என்றால் என்ன.? இது எதனால் உருவாகிறது.? உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
EL Nino என்பது பூமியில் வறட்சி ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இத்ஹுஒரு குறிப்பிட்ட கால அளவில் ஏற்படுகிறது. EL Nino ஏற்பட்டால் பெரும் தாக்கம் எற்படும். எனவே, EL Nino -வை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
What is Super EL Nino in Tamil:
பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வு தான் எல் நினோ. இன்னும் தெளிவாக சொல்லப்போனால், பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருப்பது EL Nino ஆகும். பொதுவாக பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 26 டிகிரி முதல் 27டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சாதாரண 32C – 34 C -ஐ விட அதிமாக இருந்தால் அந்த வானிலை Super EL Nino எனப்படுகிறது.
கடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கும். கடல் வெப்பநிலை எப்போது அளவுக்கு அதிமாக இருக்கிறதோ அதனை தான் எல் நினோ என்று கூறுகிறார்கள். இந்த எல் நினோ ஆனது, பருவமழையின் போக்கை மாற்றகூடியதாக இருக்கிறது. எல் நினோ 2 லிருந்து 7 ஆண்டுகள் இடைவெளியில் ஏற்படுகிறது என கூறுகிறார்கள். அப்படி ஏற்பட்டால் எல் நினோ 12 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்போது, கடந்த 3 ஆண்டுகளாக நினா நிலை தான் இருக்கிறது. ஆனால், இந்த வருடத்தில் எல் நினோ ஏற்படும் என கணிக்கப்படுகிறது.
காற்றின் தன்மை எல் நினோ காலகட்டத்தில் மாறுபடும். இதனால், புயல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. முன்பிருந்தால் காலத்தில் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் எல் நினோ உருவாகியது. ஆனால், இப்போது இருக்கும் ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகிறது. எல் நினோ ஏற்பட்டால் 60% வரை வறட்சி உண்டாகும். சராசரி மலையை விட 30% அளவிற்கு மழைப்பொழிவு குறைவதற்கான வாய்ப்புள்ளது. வெறும் 10% மழை மட்டுமே இக்காலத்தில் ஏற்படும் என்றும் கணிக்கப்படுகிறது.
எல் நினோ வேலை, ஒன்று அதிக வெப்பத்தை கொடுக்கும் அல்லது அதிக மழைபொழிவை கொடுக்கும். 2024 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களில் அமெரிக்காவின் தேசிய மற்றும் வளிமண்டல நிறுவனம் (NOAA) சில நாட்களுக்கு முன் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவை Super EL Nino தாக்கும் எனவும் கூறப்படுகிறது.
அனாதீனம் நிலம் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |