What Not To Do After An Oil Bath in Tamil
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! நாம் தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி நீங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பீர்களா..? இது என்ன கேள்வி என்று..? யோசிப்பீர்கள். பொதுவாக ஆண்கள் பெண்கள் என்று அனைவருமே மாதம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து விடுவார்கள்.
அப்படி Oil Bath செய்யும் நபர்களுக்கு மனதில் பல கேள்விகள் இருக்கும். என்னவென்றால் ஆண்கள் எந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். பெண்கள் எந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று அனைவருக்குமே ஒரு குழப்பம் இருக்கும். இந்த குழப்பத்திற்கான விடையை தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பாருங்கள். சரி வாங்க பிரண்ட்ஸ் இன்று நாம் என்ன தகவல் பற்றி பார்க்கப்போகின்றோம் என்று படித்தறியலாம்.
இது போன்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது ஏன் தெரியுமா
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
பொதுவாக தமிழர்கள் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதை பாரம்பரிய வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதுபோல நாம் தலையில் எண்ணெய் வைத்து குளிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நமக்கு தெரியும்.
அதாவது தலையில் எண்ணெய் வைத்து குளிப்பதால், நம் மூளையில் இருக்கும் வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு, நம் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தையும், உடலிலுள்ள இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தத்தை குறைத்து, உடல் உறுப்புகள் அனைத்தையும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது. மேலும் கண்பார்வை திறனை மேம்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் முடி உதிர்வை குறைத்து முடியை நீளமாக வளர செய்கிறது. மேலும் எலும்பு தேய்மானங்களை சரி செய்ய உதவுகிறது.
குழந்தைகளுக்கான குளியல் பொடி செய்யலாம் வாங்க
இதுபோல தலையில் எண்ணெய் வைத்து குளிப்பதால் பல நன்மைகள் நம் உடலிற்கு கிடைக்கிறது.
சரி நீங்கள் மேல் இருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆண்கள் மற்றும் பெண்கள் எந்தெந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது. மற்றும் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நேரம் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு என்னவெல்லாம் செய்ய கூடாது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளாலாம் வாங்க..!
எண்ணெய் குளியலுக்கு முன் செய்ய வேண்டியவை:
- நீங்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சூடான நீரில் தான் குளிக்க வேண்டும்.
- அதுபோல சூரியன் உதயமான பின் தான் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும்.
- குளிக்கும் போது சோப் மற்றும் சாம்பு பயன்படுத்தாமல், சீயக்காய், அரப்பு, சாதம் வடித்த கஞ்சி போன்றவற்றை பயன்படுத்தி குளிப்பது நல்லது
எண்ணெய் குளியலுக்கு பின் செய்யக் கூடாதவை:
- தலையில் எண்ணெய் வைத்து குளிக்கும் அன்று நீங்கள் பகலில் உறங்க கூடாது. நாம் எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று நமக்கு கொஞ்சம் சோர்வாக தான் இருக்கும். ஆனாலும் நாம் பகலில் உறங்க கூடாது. காரணம் தலையில் எண்ணெய் வைத்து குளித்து விட்டு உறங்கினால், உங்கள் கண்கள் வழியாக வெளியேறும் உஷ்ணமானது வெளியேறாமல் உடலிலேயே தங்கி விடும். மேலும் இதுபோல உறங்கினால், கண்களில் பாதிப்பு, தலைவலி, வயிற்று வலி போன்ற உபாதைகள் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- அதுபோல பழைய சாதம், மோர், கற்றாழை, இளநீர் மற்றும் தாம்பத்தியம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்கள் உண்ணவே கூடாது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |