How Many Star AC is Good For Home in Tamil
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க. இப்போது அனைவரது வீட்டிலும் இன்றையமையாத பொருளாக மாறி வருகிறது AC. அதனால் பெரும்பாலானவர்கள் ஏசி வாங்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருப்பார்கள். அப்படி புதுசா ஏசி வாங்க செல்லும் அனைவர்க்கும் பயனுள்ள வகையில் இப்பதிவில் கரண்ட் பில் கம்மியா வர எத்தனை ஸ்டார் உள்ள AC வாங்கணும் என்பதையும் 3 ஸ்டார் AC -க்கும் 5 ஸ்டார் AC -க்கும் என்ன வித்தியாசாம் என்பதையும் பார்க்கலாம் வாங்க.
பொதுவாக, பெரும்பாலனவர்களுக்கு AC வாங்கும்போது எத்தனை ஸ்டார் உள்ள AC வாங்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். ஏற்கனவே ஏசி வாங்கியவர்களாக இருந்தால் அதனை பற்றிய முழு விவரமும் தெரியும். ஆனால், புதிதாக ஏசி வாங்குபவர்களுக்கு அந்த அளவிற்கு AC பற்றிய விவரம் தெரியாது. ஆகையால், அவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், இப்பதிவில் எத்தனை ஸ்டார் உள்ள AC சிறந்தது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Which ac is Best for Electricity Saving in Tamil:
AC -யை பொறுத்தவரை குளிரூட்டும் திறன் மற்றும் அந்த குளிர்ச்சியை வழங்க சாதனம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறது என்பதன் அடிப்படையில் ஸ்டார்கள் வழங்கப்படுகின்றன.
நாம் அனைவருக்குமே 3 ஸ்டார் ஏசி மற்றும் 5 ஸ்டார் ஏசி பிரபலமானவை என்பது தெரியும். இதில் 5 ஸ்டார் ஏசி அதிக ஆற்றல் திறன் கொண்டது என்பதை நாம் அறிய வேண்டும். அதேபோல், 1 ஸ்டார் ஏசி என்றால் மிக குறைந்த ஆற்றலை வழங்கும் என்பதை அறிய வேண்டும். ஆகவே, ஏசி அதிக ஆற்றல் திறன் கொண்டதாக இருந்தால் தான் மின் கட்டணத்தில் பெருமளவு சேமிக்கப்படும். எனவே, உங்கள் வீட்டில் மின்சார பில் கம்மியாக வர வேண்டுமென்றால் 5 ஸ்டார் ஏசி சிறந்தது.
ஆனால், 3 ஸ்டார் ஏசியை விட 5 ஸ்டார் ஏசி சற்று அதிக விலை. இருந்தாலும், 3 ஸ்டார் ஏசியை விட 5 ஸ்டார் ஏசி 28 சதவீதம் கூடுதல் மின்சாரத்தை சேமிக்கும். ஆகவே, என்றுமே 5 ஸ்டார் ஏசி சிறந்தது.
ஏசியை நம் வீட்டில் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் AC -க்கும் இடையே உள்ள மின் நுகர்வு வேறுபாடு:
நட்சத்திர மதிப்பீடு | 0.75 டன் | 1.0 டன் | 1.5 டன் | 2.0 டன் |
3 ஸ்டார் | 542 வாட்ஸ் | 747 வாட்ஸ் | 1104 வாட்ஸ் | 1448 வாட்ஸ் |
5 ஸ்டார் | 450 வாட்ஸ் | 554 வாட்ஸ் | 840 வாட்ஸ் | 1113 வாட்ஸ் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |