இந்த வகை இரத்தம் உடையவர்கள் நீண்டகாலம் இளமையாக இருப்பார்களாம்.!

Advertisement

Which Blood Group is Stay Younger for Long Term in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் எந்த வகை இரத்தம் உடையவர்கள் நீண்டகாலம் இளமையாக இருப்பார்கள் (Which Blood Group is Likely to Stay Younger for Longer in Tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக இக்காலத்தில் அனைவரும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். ஆரோக்கிய பிரச்சனைகள் வந்தால் கூடவே இளமையும் குறைந்துகொண்டே வருகிறது என்று தான் அர்த்தம்.

தன்னை இளமையாகவும் அழகாகவும் காட்டி கொள்ள வேண்டும் என்பதே பலரின் ஆசை. ஆனால், முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் மாசினால் அழகும் இளமையும் குறைந்துகொண்டே வருகிறது. இதனால், இளமையையும் அழககையும் தக்கவைத்துக்கொள்ள பலரும் பலவிதமான வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். இதற்கிடையில் இளமையாக இருக்க இரத்தவகையும் ஒரு காரணமாக உள்ளது. அதாவது, இரத்த வகையில் A+, A-, B+, B-, AB+, AB-, O+, O- இதுபோன்ற வகைகள் உள்ளது. இவற்றில் ஒரு இரத்த வகை உடையவர்கள் மட்டும் அவ்வளவு சீக்கிரம் வயதான தோற்றத்தை பெற மாட்டார்களாம். அதாவது, இந்த வகை இரத்தம் உடையவர்கள் மட்டும் நீண்டகாலம் இளமையாகவே இருப்பார்களாம். அந்த இரத்த வகை எது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

இரத்த வகைகள் எத்தனை?

நீண்ட காலம் இளமையாக இருக்க இந்த வகை இரத்தமும் ஒரு காரணமா.?

நீண்ட காலம் இளமையாக இருக்க இந்த வகை இரத்தமும் ஒரு காரணமா

இளமைக்கும் இரத்த வகைக்கும் சம்மந்தம் உள்ளது என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அதாவது, ஒருவருக்கு வயதாவதற்கும், அவரின் இரத்த வகைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

 A+, A-, B+, B-, AB+, AB-, O+, O- போன்ற இரத்த வகைகளில் B இரத்த வகை உடையவர்கள் நீண்ட காலம் இளமையாக இருப்பதையும், அவர்கள் மெதுவாக தான் வயதான தோற்றத்தை அடைகிறார்கள் என்பதையும் ஆய்வில் கண்டறிந்துள்ளார்கள். 

2004 ஆம் ஆண்டில், டோக்கியோவில் வசிக்கும் 100 வயதுக்கு மேற்பட்ட 269 பேருக்கு, இரத்த வகைகளுக்கும் ஆயுட்காலத்திற்கும் இடையிலான தொடர்பை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அந்த ஆய்வில் மற்ற இரத்த வகையை காட்டிலும், B இரத்த வகையை உடையவர்கள் இளமையாக இருப்பதையும், அவர்கள் வயதான தோற்றத்தை மெதுவாக அடைவதையும் கணடறிந்துள்ளார்கள்.

Which Blood Group is Stay Younger for Long Term in Tamil

மற்ற இரத்த வகையை காட்டிலும், B வகை இரத்தம் உடையவர்களின் வளர்சிதை மாற்றம் சிறப்பாக உள்ளது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, B வகை இரத்தம் உடையவர்கள் மட்டுமே நீண்ட காலம் இளைமையாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

எந்த வகை இரத்தம் உள்ளவர்கள் யாருக்கெல்லாம் இரத்தம் கொடுக்கலாம்

உலக மக்கள் தொகையில், 10% மட்டுமே B வகை இரத்தத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இளமையை தக்கவைத்துக்கொள்ள இரத்த வகை ஒரு காரணமாக இருந்தாலும், மறுபுறம் நாம் உட்கொள்ளும் ஆரோக்கியமான உணவு முறை இளமையை தக்கவைத்துக்கொள்ள மிகவும் அவசியம். முடிந்தவரை பாஸ்ட் புட், செயற்கை உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement