இந்துக்கள் ஏன் மாட்டிறைச்சியை சாப்பிடுவதில்லை தெரியுமா.? இது தான் காரணம்.?

Advertisement

Why Can’t Hindu Eat Beef in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நம்மில் பலருக்கும் அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருக்க முடியாது. அசைவ உணவுகளில் மீன், ஆடு, கோழி ஆகியவ்ற்றிக்கு அடுத்ததாக அனைவரும் சாப்பிட நினைப்பது மாட்டு கறி தான். ஆனால், பெரும்பாலான இந்துக்கள் மாட்டு கறி சாப்பிடுவதை சாப்பிட மாட்டார்கள். அதையும் மீறி சாப்பிட விரும்பினால் மற்றவர்கள் சாப்பிட கூடாது என்று கூறுவார்கள்.

ஏன் இந்துக்கள், மட்டும் மாட்டு இறைச்சியை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா.? எனவே, உங்களுக்கு பயனுள்ள இப்பதிவில் Why Can’t Hindu Eat Beef in Tamil  கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மாட்டு கறி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..! | யார் சாப்பிடக்கூடாது தெரியுமா.?

இந்துக்கள் ஏன் மாட்டிறைச்சி சாப்பிட கூடாது.?

  • இந்து மதத்தில் பசுக்கள் புனிதமாக கருதப்படுகிறது. மேலும், பசுக்களை படுகொலை செய்வது பாவமாக கருதப்படுகிறது. முக்கியமாக, ஆன்மீகத்தின்படி, பசு ஆனது ஒரு தாயாகவும், செல்வம், செழிப்பு மற்றும் ஆன்மீகத்தின் சின்னமாக கருதப்படுகிறது.
  • அதுமட்டுமில்லாமல், விவசாயத்தில் பெரிதும் பயன்படுத்துவது மாடு தான். அக்காலத்தில் உழவு செய்வதற்கு மாடு இன்றையமையாத ஒன்றாக இருந்துள்ளது.
  • கிருஷ்ணர் போன்ற கடவுள்கள் பசுக்களுடன் மிக நெருங்கிய தொடர்புடையவர்கள்.
  • இந்து வேதங்களில் மிக பழமையான ரிக் வேதத்தில் பசு ஆனது, தூய்மையையும் தரத்தையும் குறிக்கும் ஒரு புனிதமான சின்னம் ஆகும். முழுமுதற் கடவுளான சிவபெருமானின் வாகனமாக திகள்வது பசு தான்.

இந்துக்கள் ஏன் மாட்டிறைச்சி சாப்பிட கூடாது

  • கோவிலுக்கு சென்று சிவபெருமானின் வாகனமான தந்தியைவணங்கிவிட்டு, பசு இறைச்சியை எப்படி சாப்பிட முடியும். இந்து தெய்வங்களில் ஒரு தாயாகவும், ஒரு தெய்வமாகவும் பசு இருக்கிறது. இதனால் தான் இந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். மேலும், இதனை ஒரு பாவ செயலாகவும் பார்க்கிறார்கள்.
  • பண்டைய காலம் முதல் பசுவை தெய்வமாக கருதி தான், ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் என்று கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களில் இல்லையென்றாலும் மாட்டு பொங்கல் அன்று மாடுகளுக்கு பூஜை செய்து வணங்கி வருகிறார்கள்.
  • கிராம புறங்களில், வீட்டில் வெள்ளி செவ்வாய் மற்றும் ஞாயிறு போன்ற கிழமைகளில் சாமி கும்பிடும்போது அவரவர் வீட்டில் உள்ள பசுவையும் தெய்வமாக கருதி, தீபாராதனை காட்டி, திருநீர் இட்டு வழிபடுவார்கள். அந்த அளவிற்கு இந்து மதத்தில் பசு புனிதமாக கருதப்படுகிறது.

இந்தியாவில் உள்ள நாட்டு மாடு இனங்களின் வகைகள்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement