ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள 7 வித்தியாசங்கள் உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்

பொதுவாக ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே வித்தியாசம் இருக்கும். அந்த வித்தியாசமானது நிறம், குணம், அழகு பொறுத்து மாறுபடும். உங்களை  போல் மற்றவர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் குணங்கள் மாறுபடும். இரண்டு நபர்கள் நட்பாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இடையே குணங்கள் மற்றும் பேசும் விதம் இன்னும் பல முறைகள் வித்தியாசமாக இருக்கும். இது போல ஆணுக்கும், பெண்ணுக்கும் 7 வித்தியாசங்கள் இருக்கின்றதாம்..! உங்களுக்கு தெரியுமா.? நம்ப முடியவில்லையா.! இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மூளை:

பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை பெரியதாக இருக்குமாம். பெண்களில் இருக்கும் மூளையை விட 8 % பெரியதாக இருக்கும். 2014 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் பெண்களை விட ஆண்களுக்கு மூளை பெரியதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பெண்களை விட ஆண்களுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். மேலும் புதிய விஷயங்களை ஈசியாக ஆண்கள் கற்று கொள்வார்கள்.

தசை பகுதி:

பெண்கள் உடற்பயிற்சி செய்யும் தசைகள் பெரிதாக வளராது. அதுவே ஆண்கள் உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் வேகமாக வளரும். இதற்கு காரணம் என்ன தெரியுமா.? பெண்கள் உடம்பில் இருக்கும் டெஸ்ட்ரோஜன் விட ஆண்களுக்கு 20 மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் தான் ஆண்கள் பெண்களை விட உடலளவில் பலமாக இருக்கிறார்கள்.

இந்த டெஸ்ட்ரோஜன் அதிகமாக இருப்பதால் ஆண்களுக்கு இரக்க குணம் குறைவாக இருக்கும். பெண்களுக்கு இரக்க குணம் அதிகமாக இருக்கும். மேலும் ஆண்களுக்கு தலையில் சொட்டை விழுந்துவிடும். பெண்களுக்கு எவ்வளவு வயதானாலும் சொட்டை விழுகாது. இதற்கு காரணம் உடலில் உள்ள டெஸ்ட்ரோஜன் தான்.

தாடி வளருவது:

ஆண்களுக்கு மட்டும் தான் முகத்தில் தாடி வளர்ந்திருக்கும். பெண்களுக்கு தாடி வளராது. இதற்கு காரணம் ஆண்களுக்கு உடலில் ஆன்ட்ரோஜன் அதிகமாக இருக்குமாம். இதனால் தான் ஆண்களுக்கு முகத்தில் தாடி மற்றும் உடல் முழுவதும் முடி அதிகமாக இருக்கிறது.

செரிமானம்:

ஆண்களை விட பெண்களுக்கு பெருங்குடலின் அளவு பெரியதாக இருக்கும். இதனால் தான் பெண்களுக்கு செரிமானம் ஆவதற்கு நேரம் ஆகும். ஆனால் ஆண்களுக்கு விரைவாக செரிமானம் ஆகிவிடும். இதே போல் மலம் கழிப்பதிலும் ஆண்களை விட பெண்களுக்கு நேரமாகும்.

சத்தமாக பேசுவது:

பெண்களின் கழுத்து பகுதியை விட, ஆண்களின் கழுத்து பகுதி பெரியதாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். இதை Larynx  அல்லது Voice Box என்று கூறலாம். ஆண்களுக்கு குரல்வளை பெரியதாக இருப்பதால் அவர்கள் சத்தமாக பேசுவார்கள்.

உயரமாக இருப்பது:

பெண்களை விட ஆண்கள் தான் உயரமாக இருப்பார்கள். பெண்கள் தான் குள்ளமாக காணப்படுவார்கள்.

கண்கள்:

பெண்களுக்கு, ஆண்களுக்கும் ஒரே மாதிரி கண்கள் இருக்கலாம். ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் தொலைநோக்கு பார்வைத்திறன் அதிகமாக இருக்கும். மேலும் ஆண்கள் பெண்களை விட வெளிச்சத்தையும் அதிகமாக  பார்க்க முடியும்.

 

மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Interesting information
Advertisement