முடி வளர எத்தனை நாள் ஆகும்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் ஒரு சுவாரசியமான தகவலை பற்றி தெரிந்து கொள்வோம். முடி வளரவில்லை என்று கவலை படுவீர்கள். முடி வளருவதற்கு பல குறிப்புகளை பயன்படுத்துவீர்கள். ஆனால் அந்த முடி வளருகிறதா.! அப்படி வளர்ந்தாலும் எந்த அளவிற்கு முடி வளர்ந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா.? மனிதனுக்கு இயற்கையாகவே ஒரு மாதத்தில் எவ்வளவு முடிகள் வளரும் என்று இந்த பதிவை படித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு மாதத்தில் முடி எவ்வளவு வளரும்:
பெண்களின் தலை முடியை விட ஆண்களுக்கு முடி வேகமாக வளரும். நமது உடலில் உதடு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் மட்டும் தான் முடி வளர்ச்சி காணப்படாது.
தோராயமாக ஒரு மாதத்திற்கு 0.5 முதல் 1.7 சென்டிமீட்டர் வரை முடி வளரும். அதாவது 1/4 அங்குலம் முதல் 1/2 அங்குலம் வரை முடியின் வளர்ச்சி காணப்படும்.முடியின் வளர்ச்சியை நான்கு வகைகளாக பிரிக்கின்றனர். அதாவது அனாஜன், கேடஜன்,டெலோஜென், எக்ஸோஜென் என பிரிக்கின்றனர்.
அதில் முதலாவதாக காணப்படும் அனாஜன் என்பது முடியில் வளர்ச்சியை ஏற்படுத்த கூடியது.
அடுத்து கேடஜன் 7 அல்லது 10 நாட்கள் நிகழும். அப்பொழுது முடியின் வளர்ச்சி குறைந்து காணப்படும்.
மூன்றாவதாக டொலோஜென் என்பது புதிய முடிகளை வளர வைக்கும்.
கடைசியாக எக்ஸோஜென் என்பது முடிகளை உதிர செய்யும். அதாவது தோராயமாக ஒரு நாளைக்கு 50 முதல் 150 முடிகளை இழக்க செய்யும்.
முடி என்பது 15 வயதிலிருந்து 30 வயது வரைக்கும் தான் முடி வேகமாக வளரும். வயதான பிறகு சில நுண்ணறைகள் வேலை செய்வதை நிறுத்திவிடும். அதனால் வயதான பிறகு முடி கொட்ட ஆரம்பிக்கிறது.
முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான உணவுகள்:
முடி வளர்ச்சிக்கு மீன்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம், வைட்டமின் B 12, இரும்புசத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.
அடுத்து பச்சை காய்கறிகள் அதிகமாக சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. இந்த சத்துக்கள் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பருப்பு வகைகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை முடியின் வளர்ச்சியை தூண்ட செய்கிறது.
மொட்டை அடித்தால் முடி வளர எவ்வளவு நாள் ஆகும்:
மொட்டை அடித்தால் முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும் என்று கூறுவார்கள் ஆனால் இது முற்றிலும் தவறு. உண்மையில், முடியை முழுவதுமாக நீக்கிவிட்டோம் என்றால், பொடுகு போன்ற எந்தத் தொல்லையும் இருக்காதுதான். ஆனால், தலையில் உள்ள அனைத்து முடிகளும் நீக்கப்படுவதால், சூரிய ஒளி நேரடியாக உச்சந்தலையில் விழும். இதனால், தலையில் எரிச்சல், புண், பொடுகு போன்றவை ஏற்படலாம்.
அதாவது, தலையை மொட்டையடிக்கும்போது கூந்தல் நேராக வெட்டப்படும். இது வளர வளர கரடுமுரடானதாக இருப்பது போல் தோன்றுமே தவிர முடியின் அடர்த்தியை ஒருபோதும் மாற்றாது. நீங்கள் தலைமுடியை ஷேவிங் செய்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் கிடையாது. எனவே மொட்டை அடிப்பது உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிப்பதில்லை. முடி உதிர்தல் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
| மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Interesting information |














