YouTube-ல் 1 மில்லியன் Views-க்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா?

Advertisement

YouTube-ல் 1 மில்லியன் Views-க்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா?

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவு YouTube ஜன்னல் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கும், YouTube ஜன்னல் ஆரம்பத்தினால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் YouTube-ல் 1 மில்லியன் Views-க்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதனை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்..

How Much Does YouTube Pay You for 1 Million Views in Tamil:

பொதுவாக YouTube-யில் ஒரு வீடியோவில் மட்டுமே 1 மில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர் என்றால் அந்த வீடியோவிற்கு நிறைய பணம் கிடைத்திருக்கும் என்று நினைப்பவர்களா நீங்கள்.. அப்படியென்றால் அந்த நினைப்பு முற்றிலும் தவறானது. ஆம் நண்பர்களே ஒரு வீடியோவில் 1 மில்லியன் பார்வையாளர்கள் வந்திருந்தாலும் இவ்வளவு பலன் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

அதேபோல் யூடியூபில் ஒவ்வொரு Category வீடியோவிற்கும் ஒவ்வொரு விதமாக தான் வருமானம் கிடைக்குமாம். இதன் காரனமாக ஒரு வீடியோவிற்கு அதிக பார்வையாளர்கள் வந்திருந்தாலும் அதற்கு இவ்வளவு பணம் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடையது.

குறிப்பிட்ட வீடியோவிற்கு பணம் அதிகமாக கிடைக்கலாம். குறிப்பிட்ட வீடியோவிற்கு பணம் மிகவும் குறைவாக கிடைக்கலாம். அதாவது குறிப்பிட்ட வீடியோவிற்கு பார்வையாளர்கள் குறைவாக இருந்தாலும் அதற்கு அதிகமாக பணம் கிடைக்கலாம். அதேபோல் குறிப்பிட்ட விடியோவிற்கு பார்வையாளர்கள் அதிகமாக இருந்தும் பணம் குறைவாக கிடைக்கும். ஆக நாம் போடும் வீடியோவிற்கு பொறுத்து நமக்கு பணம் அதிகமாக அல்லது குறைவாக கிடைக்கும்.

குறிப்பிட்ட விடியோவிற்கு பார்வையாளர்கள் அதிகமாக இருந்தும் பணம் குறைவாக கிடைப்பதற்கு என்ன காரணம் என்றால் அந்த விடியோவரிக்கு விளம்பரங்கள் (AdSense) அதிகமாக இருந்திருக்காது, அதன் காரணமாக தான் வருமானம் குறைவாக கிடைத்திருக்கும். சில வீடியோவிற்கு பார்வையாளர்கள் குறைவாக இருந்திருப்பார்கள் ஆனால் அந்த வீடியோவிற்கு வருமானம் அதிகமாக கிடைத்திருக்கும் இதற்கு காரணம் அந்த வீடியோவில் விளம்பரங்கள் (AdSense) அதிகம் இருந்திருக்கலாம்.

மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Interesting information
Advertisement