மனித உடலை பற்றி யாருக்கும் தெரியாத சுவாரசியமான தகவல்கள்..!

Advertisement

மனித உடலை பற்றிய தகவல்கள்..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது மிகவும் சுவாரசியமான தகவல்தான். அது என்னவென்றால் மனித உடலை பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசியமான தகவல்கள்..! பற்றித்தான் பார்க்கபோகின்றோம். நமது உடலில் பல ரகசியங்கள் உள்ளன அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் விரிவாக காணலாம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

மனித உடலை பற்றிய சுவாரசியமான தகவல்கள்:

சுவாசமண்டலம்:

manitha udal patriya thagavalgal in tamil

சாப்பிடுகின்றபோது நம்மால் சுவாசிக்கமுடியாது ஏனென்றால் நாம் சுவாசிக்கும் காற்று மற்றும் நாம் சாப்பிடுகின்ற உணவுகளும் நமது தொண்டை வழியாகத்தான் செல்லுகின்றது அதனால் தான் நம்மால் சுவாசிக்க முடியாது.

ஒருநாளில் சராசரியாக  30,000 முறை சுவாசிக்கின்றோம்.

முகம்:

manitha udal patriya thagavalgal tamil

நமது முகத்தில் கோடிக்கணக்கான பூச்சிகள் உள்ளது என்று கூறப்படுகிறது அவையாவும் நமது  கண்களுக்கு தெரியாது என்று கூறப்படுகின்றது.

சிலருக்கு மட்டும் கன்னத்தில்குழி விழும். அதை ஜோதிடரீதியாக அதிர்ஷ்டம் என்பார்கள். ஆனால் அறிவியல் ஆய்வாளர்கள் இதனை கன்னத்தில் உள்ள தசைகளில் ஏற்படும் மாற்றம் என்றும் கன்னத்தில் அதிகமாக கொழுப்பு இருந்தாலும் இப்படி குழி விழுகின்றது என்கிறார்கள்.

நமது உடலின் மிகவும் வலிமையான தசை எதுவென்றால் நமது நாக்கு தான்.

கண்கள் :

manitha udal pagangal

நாம் பிறந்ததில் இருந்து வளர்ச்சியடையாத பாகம் எது என்றால் நமது கண்கள் தான் ஏனென்றால் அவை நாம் கருவில் இருக்கும்பொழுதே முழுமையாக வளர்ச்சி அடைந்துவிடுகின்றது.

நமது கண்களுக்கு 576 megapixel பார்க்கும் திறன் உள்ளது. இதனால் நமது கண்களால் 10 மில்லியன் வண்ணம் வரைக்கும் வேறுபடுத்தி பார்க்கமுடிகிறது. மேலும் பெண்களால் ஆண்களைவிட அதிக வண்ணங்களை பார்க்கமுடியும்.

சராசரியாக  1 நிமிடத்திற்கு 20 முறை கண்களை இமைக்கின்றோம். ஆனால் செல்போன் அல்லது தொலைக்காட்சி பார்க்கும்பொழுது அப்படி இமைப்பது இல்லை இதனால் நமது கண்களுக்கு அதிக பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பொதுவாக தும்மல் வரும்பொழுது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. ஏனென்றால் நாம் தும்மும் பொழுது மூக்கிலிருந்து வெளிப்படும் காற்றின் வேகம் 100 மைல் அளவிற்கு இருக்குமாம் அதனால் தான்  கண்களை திறந்து வைத்திருக்க முடியாது.

ஒருவர் தூங்கும்பொழுது பொழுது கனவுகள் வருவது சாதாரணமான ஒன்று ஆனால் நாம் குறட்டை விட்டுக்கொண்டு தூங்கும்பொழுது கனவுகள் வராது என கூறுகின்றன. அதேபோல்  ஒருவர் தூங்கும் பொழுது அவரின் கண்விழிகள் சுற்றிக்கொண்டிருந்தால்  அவர்கள் கனவு உலகத்தில் உள்ளார் என்று அர்த்தம் ஆகும்.

கைகள் :

 manitha udal parts in tamil

நமது உள்ளங்கைகளில் உள்ள ரேகைகள் நாம் கருவில் உள்ள பொழுதே உருவாகின்றன. இவை நாம் கருவில் வளரும் 12-வது வாரத்திலேயே உருவாகின்றன.

பொதுவாக வலது கைகளில் உள்ள ரேகைகள் நாம் வளர வளர மாற்றம் அடைகின்றது. ஆனால் நமது இடதுக்கைகளில் உள்ள ரேகைகள் அப்படியேதான் இருக்கும். இரண்டு கைகளையும் சேர்த்துவைத்து பார்த்தால் உங்களுக்கே மாறுபாடு தெரியும்.

மேலும் நமது கைகளில் உள்ள சுண்டுவிரல் மட்டும் இல்லையென்றால் நமது கைகளின் பலத்தில் 50% குறைந்துவிடுமாம்.

மூளை:

manitha udal pagangal in tamil

பொதுவாக நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தி அவைகளிடம் வேலைவாங்குவது நமது மூளைதான் இதற்காக நமது மூளை நரம்புமண்டலத்தை பயன்படுத்துகின்றது. நரம்புமண்டலத்தில் மூளையின் செய்தி எவ்வளவு வேகத்தில் செல்லும் என்றால் 257 km per hour என்ற வேகத்தில் செல்லுகின்றது. நமது உடலில் கொழுப்பு அதிகம் உள்ள உறுப்பும் இந்த மூளைதான்.

மூளை நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் இருந்து 20% பயன்படுத்திக் கொள்கின்றது. ஒருநாள் முழுவதும் இயங்குவதற்கு நமது மூளை சராசரியாக 20 வாட்ஸ் மின்சாரத்தை உருவாக்குகின்றது.

இதயம்:

manitha udal pagangal tamil

நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் இதயம்தான் இரத்தத்தை கொண்டு செல்லுகின்றது இதயத்தில் உள்ள அனைத்து இரத்தநாளங்களையும் ஒன்று சேர்த்தால் 97,000 km தூரத்திற்கு இருக்குமாம் இதனை வைத்து நமது பூமியையே 2 முறை சுற்றிவரலாம்.

ஒரு நாளில் சராசரியாக  1,00,000 முறை துடிக்கின்றது. பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு வேகமாக துடிக்கின்றது என்று கூறப்படுகின்றது.

பொதுவாக நாம் கருவில் உருவாகும்பொழுது நாம் அனைவரும் பெண்கள்தான் சிலநாட்களுக்கு பிறகு y கிரோசோம் என்று ஒன்று நமது உடலில் இணைகின்றது. அதனால் தான் ஆண்களாக மாறுகின்றனர்.

நமது முடிகள் மற்றும் நகங்களை நறுக்கும்பொழுது நமக்கு எந்தவித வலிகளும் ஏற்படாது ஏனென்றால் அவைகள் நமது உடலின் இறந்தபோன செல்களாகும். மேலும் கைகளில் உள்ள நகங்களை நறுக்கும்பொழுது விரைவாக வளர்ந்து விடுகின்றன ஆனால் கால் நகங்களை நறுக்கும்பொழுது விரைவாக வளராது.

நமது கால்களில் உள்ள கட்டைவிரல் நமது உடலின் எடையில் 40% தங்குகின்றது.

உலகத்தில் உள்ள மக்கள் தொகையை காட்டிலும் அதிகமான பாக்டீரியாக்கள் நமது வாயினுள் உள்ளது இதில் சில நல்ல பாக்டீரியாக்களும் உள்ளது.

இதையும் படியுங்கள் => மனித உடல் உறுப்பு பெயர்கள் தமிழ்

மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Interesting information

 

Advertisement