கனவுகள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா.?

kanavu vara karanam

கனவு வர காரணம்

வணக்கம் நண்பர்களே.! இன்றைய  பதிவில் எல்லோருக்கும் ஒரு பயனுள்ள தகவலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகின்றோம்.  அதாவது கனவுகள் வருவதற்கு காரணம் என்னவென்றுதான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக கனவுகள் என்பது சிறிய குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை சந்திக்க கூடிய ஒரு பிரச்சனை. ஒரு சிலருக்கு நல்ல கனவுகளும், இன்னும் ஒரு சிலருக்கு கெட்ட கனவுகளும் வருகின்றன. ஒரு சிலர் கனவுகள் காணும் பொழுது அது உண்மையாக நடப்பது போல அழுவுவதும், சத்தமிடுவதும் உண்டு, ஆனால் இது போன்ற கனவுகள் வருவதற்கு காரணம் என்னவென்று யாருக்கும் தெரிவதில்லை. மேலும் இது போன்ற கனவுகள் வருவதற்கு காரணம் என்னவென்று நம் பதிவின் மூலம்  தெரிந்துகொள்வோம் வாங்க.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்ல காரணம் என்ன..?

கனவுகள் வருவதற்கு காரணம் என்ன.? 

 kanavu ethanal varukirathu

பொதுவாக நாம் உறங்குவதற்கு காரணம் என்ன தெரியுமா.? நம்முடைய உடலும், மூளையும் ஓய்வு எடுப்பதற்காக உறங்குகிறோம், ஆனால் நாம் விழித்திருக்கும் பொழுது கூட அதிகமாக வேலை செய்யாத மூளை நாம் உறங்கும் பொழுதுதான் அதிகமாக வேலை செய்கிறது.

நாம் தூங்கிய ஒன்றறை மணி நேரத்திற்கு  பிறகு  “Rapid Eye Motion”என்பது   தூக்கத்தின் கடைசிநிலை என்று சொல்லப்படுகிறது , இந்த நிலையில் கண்களின் விழிகளில் அசைவுகள் அதிகமாகவே இருக்குமாம். அப்பொழுது நம்  மூளையில் வேதியியல் திரவங்கள் சுரப்பதினால் கனவுகள் வருகிறது.  இதில் ஒரு சிலருக்கு ஒவ்வொரு ஒன்றறை மணி நேரத்திற்கும் ஒவ்வொரு கனவுகள் வருகின்றன. இதுவே கனவுகள் வருவதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.

அதோடு கனவுகளை  பொறுத்தவரை பலருக்கும் நல்ல கனவுகளை விட கெட்ட கனவுகள் வருவதுதான் அதிகம்.  ஒரு சிலருக்கு நன்றாக உறங்கி கொண்டிருக்கும் பொழுது யாரோ ஒருவர் நம் உடலை அழுத்துவது போலவும், சுவாசிப்பதில் சிரமம்  இருப்பது போல இருக்கும், இதைத்தான்  “Sleeping Paralysis”  என்று சொல்கிறார்கள். 

ஒரு மனிதன்  சராசரியாக இரவில் ஏழு மணி நேரத்திற்கு மேல் உறங்கும் பொழுது  ஏழு விதமான கனவுகள் வருகின்றன. ஆனால் நம்முடைய மூளைக்கு இந்த ஏழு கனவுகளையும் ஞாபகம் வைத்திருக்கும் அளவிற்கு ஞாபகம் சக்திகள் கிடையாது.

பொதுவாக கனவுகள் மனிதர்களுக்கு மட்டும் அல்ல நம் வீட்டில் வளர கூடிய நாய், பூனை போன்ற எல்லாவிதமான உயிரினங்களுக்கும் வருகிறது. பொதுவாக ஆண்கள்  காணும்  கனவுகளில் ஆண்கள் தான் அதிகமாக இருப்பார்கள், பெண்கள் குறைந்த அளவில் தான் இருப்பார்கள், ஆனால் பெண்களுக்கு வர கூடிய  கனவுகளில் இருபாலரும் சம அளவில் இருப்பார்கள்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil