விமானம் போகும் போது லைட் அடிக்கலாமா?
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் சிறு வயதில் விளையாட்டுத்தனம் அதிகமாக இருக்கும். அதேபோல் நம்மிடம் கொடுக்கும் விளையாட்டு பொருட்களை கொண்டு விளையாட மாட்டோம். வேறு விளையாட்டு பொருட்களை கொண்டு தான் விளையாடுவோம்..! அதிலும் முக்கியமானது கண்ணாடி. டார்ச் லைட் விளக்கு போன்ற பொருட்களை கொண்டு தான் விளையாடுவோம். பொதுவாக தினமும் கண்ணாடி பார்ப்போம் அதிலிருந்து ஒரு விதமான ஒளி தெரியும் அதனை நாம் எவ்வளவு தூரம் போகும் என்பதை காட்டி விளையாடுவோம். சிலர் இதை போல் செய்து ரோட்டில் வாகனம் ஒட்டி செல்பவருக்கு பெரிய பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் விமானம் மேல் செல்லும் போது கீழ் இருந்து லைட் அடித்தால் விமானம் ஒட்டிப்பவருக்கு கண்களை கூசும். அனைவருமே யோசிக்கலாம். அது எப்படி சாத்தியம் என்று ஆனால் லேசர் லைட்டுகளை அடித்தால் அதிலிருந்து ஏற்படும் ஒளி விமானிகளுக்கு ஒரு விதமான ஒளியை ஏற்படுத்தி பிரச்சனையை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. வாங்க அதனை பற்றி பார்க்கலாம்.
Why is Pointing Laser at Aircraft Dangerous in Tamil:
விமானம் பறக்கும் போது நாம் கீழ் நின்று லேசர் லைட் அடித்தால் கண்டிப்பாக அந்த விமானிக்கு கவன சிதறல் ஏற்படும். ஏனென்றால் லேசர் லைட் அந்த அளவிற்கு ஒளி தன்மை உள்ளது.
ஆகவே விமானம் செல்லும் போது யாரும் விளையாட்டுத்தமனாக லைட் அடிக்க வேண்டாம். இந்த செயலின் மூலம் நீங்கள் கைது கூட செய்யப்படலாம்.
இப்படி லைட் அடிப்பதால் அந்த பைலட்க்கு கண் பிரச்சனையும் ஏற்படும். அதேபோல் அவர்களுக்கு சிக்னல் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.
முக்கியமாக அந்த விமானம் வேறு திசைக்கு திசை திருப்பவும் வாய்ப்பு உள்ளது. இதைவிட மோசனது என்னவென்றால் பைலட்டுக்கு கண்களில் காயங்கள் ஏற்படும்.
முக்கியமாக லைட்டை நீங்கள் தொலைவில் இருக்கும் போது பல அங்குல அகலமாக இருக்கும். காக்பிட்டின் கண்ணாடியிலோ அல்லது ஹெலிகாப்டரின் குமிழியிலோ அடிக்கும் போது கண்ணாடியில் மற்றும் கண்ணாடியில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்தை மேலும் சிதறடிக்கும்.இப்படி சிதறுவதால் தான் விமானிக்கும் பலவிதமான கண் பிரச்சனையும் ஏற்படும் அவர்களுக்கு சிக்னல் கிடைக்காமலும் போகும். மேலும் இதை செய்தால் நீங்கள் நிச்சயம் கைது செய்ய படலாம். 2 அல்லது 3 ஆண்டுகள் கூட சிறை செல்ல வாய்ப்பு உள்ளது.
உலகில் இருக்கும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல்..!
மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Interesting information |