Why Are Our Voices Heard Differently in Voice Record in Tamil
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவரின் மனதில் இருக்கும் கேள்விக்கான பதிலாக இந்த பதிவு இருக்கும். இன்றைய காலகட்டத்தில் அனைவரிடத்திலும் ஸ்மார்ட் போன் உள்ளது. போன் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. போன் இருக்கும் இடத்தில் Whatsapp பயன்படுத்தமானால் இருக்கமாட்டோம் அல்லவா? அப்படி பயன்படுத்திய அனைவருக்குமே இந்த கேள்வி இருக்கும்.? அது என்ன கேள்வி என்று யோசிப்பீர்கள். வாங்க அது என்பதை பார்ப்போம்..!
வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் குரல் வேறு மாதிரி கேட்க காரணம்?
அனைவருமே வாயிஸ் மெசேஜ் அனுப்பீர்கள் அல்லவா? அதனை அனுப்பிய பிறகு உங்கள் வாய்ஸ் எப்படி உள்ளதை கேட்காமல் இருக்கவே மாட்டீர்கள். அவ்வாறு கேட்டவர்கள் அனைவருமே யோசித்து இருப்பீர்கள். இது நம்முடைய குரல் இல்லையே என்று? இதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ளபோகிறோம்.
Record செய்த கேட்கிற குரல் நமக்கு ஏன் வேறுமாதிரி கேட்கிறது தெரியுமா? அதனை தெரிந்துகொள்வதற்கு முன்பு நம்முடைய காதில் சத்தம் எப்படி கேட்கிறது என்று தெரிந்துகொள்ளுவோம்?
இதையும் படியுங்கள் ⇒ மனிதனுக்கு பயம் வருவதற்கான அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
எந்த ஒரு சத்தமும் காற்றில் அலைவரிசையை பயணித்து அது தான் நம்முடைய காதில் போய் சேரும். அது எப்படி என்றால் நமக்கு எதிரில் இருக்ககூடிய ஒருவர் பேசும்போது காதில் இருக்கக்கூடிய 3 சின்ன எலும்புகளில் மோதும். அதன் பிறகு அங்கிருந்து cochlea என்ற பகுதிக்கு செல்லும். அந்த பகுதியிலிருந்து நரம்புகள் வழியாக மூளைக்கு செல்லும். அந்த மூளை தான்நமக்கு இந்த சத்தம் என்று தனி தனியாக பிரித்து கொடுக்கும். இதேபோல் காதுக்கு எப்படி அலைவரிசை போல் சத்தம் செல்கிறதோ அதுபோல் நாம் பேசும்போது தொண்டையின் வழியாக முகத்தில் உள்ள எலும்புகளில் மோதி காதுக்கு சத்தம் செல்லும். இந்த சத்தத்தை தான் நாம் நம்முடைய குரல் என்று நினைத்து கொண்டு இருக்கோம் ஆனால்நாம் போன் மூலம் வாய்ஸ் மெசேஜ் செய்யும் போது கேட்கக்கூடிய குரல் தான் நமது உண்மையான குரல். நாம தான் தவறாக புரிந்துகொண்டு இது நம்முடைய குரல் இல்லை என்று சொல்கிறோம்.
எடுத்துக்காட்டாக:
உங்களுடைய அறையில் ஒரு சைடில் நீங்களும் மற்றோரு சைடில் உங்களுடைய நண்பர்களும் இருக்கிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் இருவரும் மட்டும் இடத்தை விட்டு நகராமல் பேசிக்கொண்டு இருக்கும் போது உங்களின் நண்பனுக்கு நீங்கள் பேசிய அனைத்துமே தெளிவாக கேட்கும்.
ஆனால் நீங்கள் இருவரும் இருக்கும் இடத்திற்கு இடையில் வேறு நான்கு நண்பர்கள் இருந்தார்கள் என்றால் நீங்கள் பேசிய வார்த்தை அனைத்தும் காற்றின் மூலம் அவர்களின் மீதி மோதி உங்களுடைய நண்பருக்கு நீங்கள் பேசிய வார்த்தையும் அழுத்தம் குறைந்து சரியாக செல்லாது. இதேபோல் தான் முகத்தில் இருக்கும் எலும்புகளும் செய்கிறது. நமக்கு நம்முடைய குரலை கேட்கும் போது வேறு யாரோ போல் இருக்கிறோம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 கிச்கிச் செய்வதால் சிரிப்பு ஏன் வருகிறது.? |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Interesting information |