Why are Sevvarali Plants Planted Along the Highways in Tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம். இன்றைய பதிவு அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றான பதிவை பற்றி தான் பார்க்க உள்ளோம். பொதுவாக பைபாஸ் மற்றும் ரோடுகளில் நடுவில் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் இருக்கும் அரளி செடிகள் அதிகம் வளர்ந்து இருப்பதை நாம் கண்டிப்பாக பார்த்திருப்போம்.
நெடுஞ்சாலையின் நடுவில் அரளி செடி வளர்க்க என்ன கரணம்?
பொதுவாக நாம் வாகனத்தில் செல்லும் பொழுது நெடுஞ்சாலைகளில் நடுவில் அரளி செடிகளை வளர்ந்து இருப்பதை பார்த்திருப்போம். அதிலும் குறிப்பாக செவ்வரளி செடிகள் வளர்க்கப்பட்டிருக்கும். செவ்வரளியுமே அரளி குடும்பத்தை சேர்ந்த செடி ஆகும்.
இந்த அரளி செடியில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு, ரோஸி போன்ற நிறங்களில் வளர்க்கப்டுகிறது. இருப்பினும் சாலைகளின் நடுவில் சிவப்பு மற்றும் ரோஸ் நிறத்தில் உள்ள செடிகள் தான் அதிகளவு வளர்க்கப்படும்.
அரளி செடி என்றால் பொதுவாக விஷத்தன்மை கொண்டது என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் மஞ்சள் நிறம் தவிர மற்ற சிவப்பு, வெள்ளை, ரோஸ் போன்ற நிறங்களில் உள்ள அரளி செடியில் விஷம் தன்மை இருக்காது. இந்த மலர்கள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது.
நெடுஞ்சாலைகளில் செவ்வரளி செடிகளை வளர்ப்பதற்கு முக்கிய காரணம் என்ன என்றால்? இந்த செவ்வரளி செடியை சாலை ஓரங்களில் நட்டு வைப்பதினால் பல்லவேறு நன்மைகள் கிடைக்கின்றது. என்ன நன்மைகள் என்று கீழ் காணலாம்.
பொதுவாக நெடுஞ்சாலைகளில் பல்வேறு வகையான வாகனங்கள் நிறைய செல்கின்றன. இந்த வாகனத்தில் இருந்து அதிகப்படியான புகைகளும் வெளியேறுகின்றன, இதன் காரணமாக சுற்றுசூழலுக்கு அதிகப்படியாக மாசடைகிறது.
இந்த வாகனங்களிலில் இருந்து வரும் புகைகளில் அதிக அளவு கார்பன் துகள்கள் இருப்பதனால் நெடுஞ்சாலைக்கிளில் பயணம் செல்பவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த பிரச்சனையை குறைப்பதற்காக நெடுஞ்சாலையின் நடுவில் மற்றும் ஓரங்களில் அரளி செடிகள் வளர்க்கப்படுகிறது.
உங்களுக்கு தோன்றலாம் ஏன் அதற்கு அரளி செடிகளை மட்டும் வரலாக்க வேண்டும் வேற செடிகளை வளர்க்க கூடாதா என்று.. மற்ற செடிகளை விட செவ்வரளி செடிகளின் இலை மற்றும் மலர்களுக்கு ஒரு ஒரு விதமான விஷ தன்மை உள்ளது. அதாவது வாகன புகையால் காற்றில் கலந்திருக்கும் கார்பன் துகள்களை மீட்கும் தன்மை இந்த செடிக்கு இருக்கிறது.
ஆக அசுத்தமான காற்றை செவ்வரளியின் இலை மற்றும் மலர்கள் ஈர்த்து மீண்டும் தூய்மையான காற்றை வெளியேற்றும். இதன் மூலம் சாலைகளில் வாகனம் ஒட்டி செல்பவர்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும்.
காற்று மாசடைவதை தடுப்பதுடன், ஒலி மாசுபாட்டையும் தடுக்க உதவி செய்கிறது, அதேபோல் விபத்துகள் நடக்கும் விபத்துகளை தடுப்பதில் கூட செவ்வரளி செடிக்கு அதிக பங்கு இருக்கிறதாம். இதன் காரணமாக தான் சாலையோரங்களில் செவ்வரளி செடிகள் வளர்க்கப்படுகிறது.
மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Interesting information |