தபால் துறையில் 1000 ரூபாய் செலுத்தும் RD Vs SCSS திட்டம் இரண்டில் எது சிறந்தது..?

Advertisement

Post Office RD vs SCSS Scheme Which is Better 

பொதுவாக நாம் அனைவருக்கும் ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் பணத்தினை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இத்தகைய எண்ணம் வந்தவுடன் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் திட்டத்தில் தான் சேமிக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அதிலும் குறிப்பாக போஸ்ட் ஆபீசில் உள்ள திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். அப்படி பார்த்தால் ஒரு திட்டத்தில் உள்ள வட்டி விகிதங்களை மட்டும் வைத்து நாம் கணக்கிட முடியாது. ஒரு திட்டத்துடன் மற்றொரு திட்டத்தினை நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது இன்னும் ஏராளமான நன்மைகள் எது என்றும், அதிக லாபத்தை கொடுப்பது எதுவென்றும் தெரிய வரும். அந்த வகையில் இன்று போஸ்ட் ஆபீசில் குறைந்தப்பட்ச தொகை 1000 ரூபாய் செலுத்தும் RD vs SCSS திட்டம் இந்த இரண்டில் எது சிறந்தது என்று பார்க்கலாம் வாங்க..!

Which is Better SCSS or RD in Post Office:

சீனியர் சிட்டிசன் திட்டம்:

போஸ்ட் ஆபீசில் உள்ள சீனியர் சிட்டிசன் திட்டம் ஆனது மூத்த குடிமக்களுக்கு என்று உள்ள ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். மேலும் இதில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம். இதில் சேமிப்பு தொகையினை மொத்தமாக கட்ட வேண்டும்.

 which is better scss or rd in post office in tamil

  1. இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகை 1000 ரூபாயாகவும், அதிகப்பட்ச சேமிப்பு தொகை 30 லட்சம் ரூபாய் வரையிலும் செலுத்திக் கொள்ளலாம்.
  2. போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விதமாக 8.2% வரை அளிக்கப்படுகிறது.
  3. மேலும் 5 வருட முதிர்வு காலத்தினை உடைய திடமாகவும் இது காணப்படுகிறது.
  4. தபால் துறையில் வழங்கும் இந்த திட்டத்தில் ஒரு நபர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ கணக்கினை தொடங்கலாம்.
  5. அதேபோல் இந்த திட்டத்தில் சேமித்து கொண்டிருக்கும் போது திடீரென்று கணக்கில் Pre Mature ஆகா பணத்தினை பெற வேண்டும் நினைத்தால் அதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட வட்டி விகிதம் இதில் பிடித்தம் செய்யப்படும்.
  6. மேலும் எந்த விதமான ரிஸ்க்கும் இல்லமால் பணத்தினை எதிர்காலத்தில் பெறுவதற்கு இது உகந்தது. அதேபோல் வட்டியும் 3 மாதத்திற்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது.
போஸ்ட் ஆபீஸ் RD Vs SBI வங்கி RD இரண்டில் எதில் முதலீடு செய்வது லாபம்.. 

போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட்:

போஸ்ட் ஆபீசில் உள்ள RD திட்டம் என்பது நம்மிடம் உள்ள குறிப்பிட்ட தொகையினை மாதம் தோறும் செலுத்தி குறிப்பிட்ட முதிர்வு காலத்திற்கு பிறகு பெரும் முறையாக இருக்கிறது. இதில் 18 வயது பூர்த்தி ஆன இந்திய குடிமக்கள் அனைவரும் சேரலாம்.

 which is best post office scheme for 1000 per month in tamil

  • இந்த திட்டத்தில் குறைந்தப்பட்ச சேமிப்பு தொகையாக 100 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம்.
  • அதேபோல் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.5% ஆனது 5 வருட கால அளவில் அளிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் சேமிப்பு தொகையினை மாதம் தோறும் செலுத்த வேண்டும்.
  • மேலும் இந்த திட்டத்தில் கடனை பெற வேண்டும் என்றால் உங்களின் சேமிப்பு தொகையில் இருந்து 50% தொகையினை கடனாக பெறலாம்.
  • தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தில் 5 வருடம் முடிந்த பிறகு மீண்டும் கணக்கினை தொடங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா 

போஸ்ட் ஆபீஸ் ஆர் Vs சீனியர் சிட்டிசன் திட்டம் இரண்டில் எது சிறந்தது.?

போஸ்ட் ஆபீசில் உள்ள RD திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் சேமித்தால் 5 வருடம் முடிந்த 70,989 ரூபாயினை மொத்த அசல் தொகையாக பெறலாம்.

அதுவே சீனியர் சிட்டிசன் திட்டத்தில் மொத்தமாக 1,00,000 ரூபாயினை டெபாசிட் செய்து 5 வருடம் முடிந்த 1,41,000 ரூபாயினை பெறலாம்

ஆகவே 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு RD திட்டமும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு சீனியர் சிட்டிசன் திட்டமும் சேமிப்பதற்கு ஏற்றாக இருக்கிறது.

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement