வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

6 மாதத்தில் 1 பவுனு எடுக்கலாம் எப்படி தெரியுமா.?

Updated On: November 26, 2025 5:08 PM
Follow Us:
1 pavan gold vanga savings tips in tamil
---Advertisement---
Advertisement

6 மாதத்தில் 1 பவுனு எடுக்க வேண்டுமா.?

எவ்வளவு தான் நகை இருந்தாலும் நகை மீது உள்ள ஆசை என்றுமே குறையாது. ஆண்களை விட பெண்களுக்கு தான் நகை வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எதாவது புதிய மாடல்களில் யாராவது நகை அணிந்திருந்ததை பார்த்தால் உடனே அதனை வங்க வேண்டும் என்று நினைப்பார்கள். நகையின் விலை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சாமானிய மக்களுக்கு நகை வாங்குவது என்பது வெறும் கனவாகவே போகிவிடும் போல.

இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது இறங்குமா என்ற ஏக்கம் எல்லாரிடத்திலும் காணப்படுகிறது. நகை வாங்குவதற்கு பணத்தை சேமித்து வைக்கும் பழக்கம் பலரிடம் காணப்படும். நீங்கள் ரொம்ப வருடமாக பணத்தை சேமித்து வைத்து கொண்டே இருந்தால் எதாவது செலவு வந்து விடும். அதனால் தான் இந்தப்பதிவில் 6 மாதத்தில் 1 பவுனு எடுப்பதற்கான சேமிப்பு முறையை பற்றிதான் அறிந்து கொள்ள போகிறோம்.

சேமிப்பு முறை:

6 மாதத்தில் 1 பவுனு எடுக்கலாம் எப்படி தெரியுமா

எல்லாரும் ஒரே மாதிரியான சம்பளம் வாங்க மாட்டார்கள். சில பேர் தினக்கூலியாக வேலை பார்ப்பார்கள், சில பேருக்கு வாரச்சம்பளம், மாத சம்பளம் என்று மாறுபடும். அது போல சம்பள தொகையும் மாறுபடும். அதனால் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வருகிறதோ அதனை பொறுத்து சேமித்து வைத்து கொள்ளுங்கள். நான் இந்த பதிவில் எடுத்துக்காட்டாக தான் ஒரு தொகையை கூறியிருக்கிறேன்.

பெண் பிள்ளைகள் பெற்ற வீட்டில் கட்டாயம் தங்கம் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் தங்கத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைத்தால் சேமிய தொகைக்கு எதாவது செலவு வந்து விடுகிறது. நீங்கள் நகைக்காக சேர்க்கும் பணத்தை எக்காரணத்தை கொண்டும் நகை எடுப்பதைத்தவிர வேறு எந்த தேவைக்காகவும் எடுத்து செலவு செய்யாதீர்கள். இதில் முதலில் தீர்மானமாக இருங்கள்.

தங்கம் விலை இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம் படி தங்கத்தின் விலையானது 10,000 ரூபாய் விற்கிறது. இந்த விலையானது நாளுக்கு நாள் ஏறவும் செய்யும், இறங்கவும் செய்யும். அதனால் ஒரு கிராம் 10,000 ரூபாய் என்றால் 8 கிராமின் விலை 80,000 ரூபையாக இருக்க கூடும். எல்லா நகை கடைகளிலும் செய்கூலி போடுவார்கள். ஒவ்வொரு கடையிலும் செய்கூலியானது மாறுபடும். அதனால் இதற்கு 10% என்று வைத்து கொள்வோம். அப்போ இதற்கு 8000 ரூபாய் வரும். இப்போது எல்லா கடைகளிலும் GST போடப்படுகிறது. இதற்கு 3% என்றால் 2,640 ரூபாய் ஆகும். அப்போ மொத்தமாக 90,640 ரூபாய் தேவைப்படும். இதில் வரும் சொச்சத்தை விட்டு விடுங்கள் 90,000 தேவைப்படும். இதற்கு எப்படி பணத்தை சேமிப்பது என்று அறிந்து கொள்வோம் வாங்க.

மேலும் இதனை மூன்று விதமாக சேமிக்க போகின்றோம். ஏனென்றால் சம்பளம் வாங்கும் முறை மாறுபடும். நீங்கள் மாதசம்பளம் வாங்குகிறீர்கள் என்றால் மாதத்திற்கு 15,000 ரூபாய் சேர்த்து வைக்க வேண்டியிருக்கும். அதுவே வார சம்பளம் வாங்குகிறீர்கள் என்றால் வாரம் வாரம் 3750 ரூபாய் சேர்க்க வேண்டும், அதுவே தினக்கூலி என்றால் 500 ரூபாய் சேர்த்து வையுங்கள்.

நான் அவ்வளவு சம்பளம் வாங்கவில்லை, அதனால் என்னால் நீங்கள் கூறியிருக்கின்ற தொகையை சேமிக்க முடியாது என்றால் உங்களால் முடிந்த தொகையை சேமியுங்கள். நீங்கள் சேமிக்கும் தொகையின் மூலம் 6 மாதத்தில் எவ்வளவு தொகை சேமிக்க முடிந்திருக்கிறதோ அந்த அளவுக்கு உள்ள நகையை எடுத்து வாருங்கள்.

உங்ககிட்ட ஒரு பவுனு நகை இருந்தா 10 பவுனு தங்கம் வாங்கலாம்! Secret Idea!

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now