5 Mistakes You Shouldn’t Make at 25 in tamil
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி 25 வயதில் செய்யக்கூடாத மற்றும் செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். 25 வயதில் செய்யக்கூடாத 5 தவறு என்று சொன்னதும் மது அருந்தக்கூடாது, சிகிரெட் பிடிக்கக்கூடாது, காதல் செய்ய கூடாது என்று கண்டிப்பாக சொல்ல மாட்டோம் அது உங்களின் விருப்பம். இது இல்லாமல் 25 வயதில் செய்யக்கூடாத 5 தவறுகளை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த பதிவை முழுமையாக படியுங்கள். உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும்.
No: 1 (சேமிப்பு):-
இந்த வயதில் கண்டிப்பாக நீங்கள் கல்லூரியை முடித்துவிட்டு ஏதாவது வேலைக்கு சென்று கொண்டடிருப்பீர்கள். நீங்கள் சம்பாரிக்கும் பணத்தைக்கூட உங்கள் விருப்பமான செலவுகளான பைக், மொபைல் இது போன்ற பொருட்களை வாங்க தான் செலவு செய்திருப்பீர்கள். அனால் உங்களுக்கு சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக வந்திருக்காது. இது பெரிய தவறு இல்லை, இதுவரை அந்த எண்ணம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. இனியாவது சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
அதாவது நீங்கள் 20 ஆயிரம் சம்பாரிக்கிரங்க அப்படின்னா அவற்றில் 10 சதவீதம் அதாவது 2000 ரூபாயை சேமிக்க வேண்டும் என்று உறுதியாக இருங்கள். ஒரு பொருளை கடன் வாங்கி வாங்குவதை விட. நீங்கள் முறையாக சேமித்து நீங்கள் விரும்பிய பொருளை வாங்குவது தான் மிகவும் சிறந்து. ஏன் சொல்ல வருகிறேன் என்று புரிந்திருக்கும். அதாவது நீங்கள் பைக், மொபைல் இது போன்ற பொருட்களை கடன் வாங்கி வாங்குவதை விட அதற்க முன்கூட்டியே சேமித்து வைத்து வாங்குவது மிகவும் சிறந்தது என்று சொல்கிறேன்.
No: 2 (சேமிப்பில் இருந்து முதலீடு):-
சிறிய வயதில் இருந்தே சேமிக்கும் பழக்கம் உங்களிடம் உள்ளது என்றால் மிகவும் மகிழ்ச்சி.. இருந்தாலும் 25 வயதுக்கு பிறகு சேமிப்பு மட்டும் பத்தாது, நீங்கள் சேமிக்கும் பணத்தினை நல்ல திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு கிராமப்புறங்களில் விதை நெல் என்று சொல்வார்கள், அது அடுத்த முறை பயிரிடுவதற்கு பயன்படுத்துவார்கள். ஒரு பானையில் 1000 விதை நெல் இருக்கிறது என்றால் அதை ஒருவருடம் கழித்து பார்த்தாலும் 1000 விதை நெல்லாக தான் இருக்கும். ஆனால் அதனை பயிரிடும்பொழுது ஒவ்வொரு விதையிலுருந்தும் 100 நெல்கள் முழித்து வரும்.. ஆகி விதை நெல் தான் உங்களின் சேமிப்பு. பயிரிடுவதுதான் முதலீடு.. ஆக சரியான திட்டங்களில் உங்கள் சேமிப்பை முதலீடு செய்து உங்கள் சேமிப்பை இரட்டிப்பு பயன்களை பெறுங்கள்.
No: 3 (Health Insurance and Term Insurance) ரொம்ப முக்கியம்:
மூன்றாவதாக நீங்கள் செய்யக்கூடாத விஷயம் என்னவென்றால் Health Insurance and Term Insurance 25 வயதிற்கு பிறகு எடுக்காமல் இருப்பது. இன்றைய கால கட்டத்தில் எருக்கு என்ன ஆகும் என்று சொல்ல முடியாது. திடீருனு உங்களுக்கு எதாவது ஆகிடிச்சி அப்படின்னா வந்த Health Insurance and Term Insurance இரண்டும் உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ஆக 25 வயதுக்கு பிறகு கண்டிப்பாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவறுகளுக்கும் பயன்படும் வகையில் ஏதாவது ஒரு இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்துவிடுங்கள். அது கண்டிப்பாக உங்களுக்கு பயந்துள்ளதாக இருக்கும்.
No: 4 (மியூச்சுவல் பண்ட் முதலீடு):
செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பின் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்று குழப்பம் இருக்கும். நீண்ட காலம் முதலீடு திட்டத்தை தேர்வு செய்யுங்கள். அதிலும் நீண்டகாலம் முதலீடு செய்யும்பொழுது நீங்கள் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு செய்வது சிறந்த பலன்களை உங்களுக்கு கொடுக்காது. பங்கு சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் சிறந்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 மியூச்சுவல் ஃபண்டின் புதிய தங்க சேமிப்புத் திட்டம்..!
No: 5
முதலீட்டின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பணத்தை சரியான முறையில் செலவு செய்ய வேண்டும்.. முதலீடு செய்து உங்களிடம் 4 முதல் 7 லட்சம் வரை இருக்கு அப்படின்னா அதில் ஒரு இடத்தை வாங்கி போடலாம். அல்லது தங்கம் வாங்கலாம். இவற்றுக்கும் நீங்கள் செலவு செய்யும் போது அதன் பணம் எப்பொழுதுமே வீண் ஆகாது.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |