உங்கள் சேமிப்பை அதிகரிக்க சிறந்த 5 வழிகள் இதோ..!

Advertisement

சிறந்த முதலீட்டு திட்டங்கள் – Best Investment Plans in Tamil

இப்போ இருக்கிற காலகட்டத்தில் நீங்கள் இப்போதிலிருந்து சேமிக்க ஆரம்பித்தால் தான் உங்கள் எதிர்காலத்திற்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே நீங்கள் சேமித்த பணத்தை உங்கள் வீட்டு பீரோவில் போய் வச்சீங்கனா கண்டிப்பாக அந்த பணத்தை வளர்ச்சியடையது. ஏதாவது ஒரு சரியான வழியில் அந்த பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அந்த பணத்தின் மதிப்பை மேலும் மேலும் அதிகரிக்க முடியும். அதற்கு தான் நம் வீட்டு பெரியவர்கள் முதல் அனைவருமே சொல்வார்கள் சரியான வழியில் முதலீடு செய்ய வேண்டும் என்பார்கள். அந்த சரியான வழிகள் இந்தியாவில் தற்பொழுது நிறையவே இருக்கின்றது. அந்த வழிகளில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் உங்கள் சேமிப்பை அதிகரிக்க முடியும். அவற்றை பற்றி இப்பொழுது நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.

பிக்சட் டெபாசிட் – Fixed Deposit:

Fixed Deposit

Fixed Deposit என்பது பண முதலீட்டு திட்டங்களில் ஒரு வகையாகும். இத்திட்டத்தின் கிழ், வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைக்க வேண்டும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது.

வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளாக நமது விருப்பதற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம்..

முதிர்வு காலம் முடிந்த பின்னர், நாம் வைப்பு வைத்திருந்த நிதி வட்டியுடன் நமக்கு கிடைக்கும். இந்த வட்டியை நாம் முதிர்வு காலத்திற்கு முன்பே மாத மாதமும் பெற முடியும். அல்லது நல்லது முதிர்வு காலம் முடித்துக்கூட வட்டியுடன் அந்த தொகையை நாம் எடுத்துக்கொள்ள முடியும்.

சிறந்த முதலீட்டு திட்டங்கள் – ரெக்கரிங் டெபாசிட் – Recurring Deposit:

Recurring Deposit

 

Best Investment Plans in Tamil – சாமானிய மக்கள் முதலீடு செய்வதற்கு உதவு வகையில் இந்த ரெக்கரிங் டெபாசிட் முக்கிய பங்கினை வகுக்கிறது. ஆகவே மாதம் மாதம் நீங்கள் ஒரு சிறிய அளவில் நீங்கள் ஒரு தொகையை சேமிக்க விரும்புகீர்கள் என்றால். நீங்கள் இந்த ரெக்கரிங் டெபாசிட்என அழைக்கப்படும் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான தொகையை முதலீடு செய்து மிகப் பெரிய தொகையாக வட்டி விகித லாபத்துடன் பெற முடியும்.

இந்த திட்டத்தில், குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாய் என்ற தவணையில் ரெக்கரிங் டெபாசிட் முதலீட்டைத் தொடங்கலாம். இது வங்கிக்கு வங்கி, மாறுபடக்கூடும் என்பது கவனிக்க தக்கது. குறைந்தபட்சம் 12 மாதம் முதல் அதிகபட்சமாக ரெக்கரிங் டெபாசிட்டில் 120 மாதங்கள் வரை முதலீடு செய்யலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி – Public Provident Fund:

உங்களுக்கு Low Risk-வும் இருக்கணும், அதேமாதிரி அதன் மூலம் High Returns கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது ஒரு சிறந்த முதலீடு திட்டமாகும். அஞ்சல் அலுவகம் அல்லது வங்கி ஆகிய இரண்டின் மூலமாகவும் இந்த திட்டத்தில் நீங்கள் இணைய மிடையும்.

இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இது ஒரு தொடர் வாய்ப்பு தொகை திட்டம் என்பதால் உங்களது முதிர்வு காலம் 15 ஆண்டுகள் இருக்கும். 15 ஆண்டுகள் முடிந்து நீங்கள் அந்த திட்டனில் முதலீடு செய்ய விரும்புகீர்கள் என்றாலும் 5 வருடம் நீட்டித்துக்கொள்ளலாம். 15 வருட முதலீட்டிற்கு அதற்கான வட்டியும் கிடைக்க கூடும்.

கடன் பத்திரம் முதலீடு – Bond:

Bond

பாண்ட் (Bond) என்பது கடன் பத்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசின் பொதுப் பணித்துறை ஆகியவை இந்தக் கடன் பத்திரங்களைப் பொது மக்களிடையே பணம் திரட்டுவதற்காக விற்கின்றன. இதை முதலீட்டாளர்கள் கடன் பாதுகாப்பிற்காக வாங்குகின்றனர். இந்தப் பத்திரங்களை வைத்திருப்போருக்கு அந்தக் காலக்கட்டங்களில் நிறுவனங்கள் அல்லது அரசு வட்டி செலுத்தும். பெரும்பாலும் இந்த வகைப் பத்திரங்களில் ரிஸ்க் ஆதிகம் இருக்காத காரணத்தினால் முதலீட்டாளர்கள் இதனை முதலீட்டுக் காலத்தில் வட்டி பெறவும் வரி விலக்குப் பெறவும் உபயோகிக்கின்றனர்.

ரியல் எஸ்டேட் முதலீடு – Real Estate:-

Real Estate

Best Investment Plans in Tamil – ரியல் எஸ்டேட் பொறுத்தவரைக்கும் அனைவராலும் முதலீடு செய்ய முடியாது. ஏன் என்றால் அனைவருக்குமே தெரியும். காரணம் அதற்கு அதிக பணம் தேவைப்படும். ஒரு வேலை உங்களிடம் ஒரு இடத்திற்கு முதலீடு செய்யும் அளவிற்கு பணம் இருக்கிறது என்றால். கண்டிப்பாக ஒரு இடத்தை வாங்கி விடுங்கள். ஏன் அப்படினா உங்களது இடத்தை பொறுத்து ஒவ்வொரு வருடமும் அதன் மதிப்பு அதிகரிக்கும். அந்த லேண்டை இறுதியில் விற்பனை செய்யும்பொழுது உங்களுக்கு அதிகளவு லாபம் கிடைக்கும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement