SIP-யில் 100 ரூபாய் முதலீடு செய்தால் 10 லட்சம் வருமானம் கிடைக்கும்..!

Advertisement

Best SIP of Rs.100 Per Month

பொதுவாக அனைவருக்குமே எந்த ஒரு பணம் பிரச்சனையும் இன்றி பணக்காரனாக இருக்க வேண்டும் அல்லது ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று நினைப்போம் அப்படி சேமிக்கும்போது சிறந்த சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்பொழுது தான் நாம் சேமிக்கும் தொகையில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆக ஈக்விட்டிஸ் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் போது Inflation-ஐ அடிப்படையாக கொண்டு நமக்கு தரும் வருமானமாக இருக்கும். இருந்தாலும் சிலர் ஈக்விட்டிஸ் திட்டங்களில் முதலீடு செய்தால் மிகவும் ரிஸ்க் என்று நினைக்கின்றனர். ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்யும் போது கண்டிப்பாக நல்ல வருமானத்தை பெறலாம். சரி வாங்க இன்றைய பதிவில் மியூச்சுவல் பண்ட் வழியாக SIP-யில் மாதம் மாதம் முதலீடு செய்து நாமும் எப்படி பணக்காரணனாக ஆகலாம் என்று இன்றைய பதிவில் நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SIP-ல மாதம் 5000 Invest பண்ணி, 2 கோடி Return கிடைக்குமா?

மியூச்சுவல் பண்ட் முதலீடு:

மியூச்சுவல் பண்ட் முதலீடு பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தால் Inflation-ஐ அடிப்படையாக கொண்டு வருமானம் கிடைக்கும்.

மேலும் இவற்றில் முதலீடு செய்யும் போது உங்கள் பணத்தை பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். ஆக பண நிறுவனங்கள் இணைந்து இருப்பதால் ஒரு சில நிறுவனங்களில் வீழ்ச்சி இருந்தாலும், மற்ற நிறுவனங்களில் ஏற்றம் இருக்கும். ஆக வீழ்ச்சியடைந்த  நிறுவனங்களை அவற்றில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் மேல் நோக்கி கொண்டு செல்லும்.

இவற்றில் உங்களுடைய முதலீட்டு காலம் எவ்வளவு நீண்டதாக உள்ளதோ அதற்கு தகுந்தது போல் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதாக இருந்தால் உங்களுடைய முதலீட்டு காலம் 7 இருந்து 10 வருடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இத்தகைய நீண்ட கால முதலீட்டில் தான் நல்ல லாபம் பெற முடியும்.

ஆக நீங்கள் Mid Cap Fund போன்று நல்ல பண்டை தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள். அதேபோல் மியூச்சுவல் பண்டில் செய்யும் போது Direct Plan-யில் முதலீடு செய்யுங்கள் இதன் மூலம் உங்களுக்கு நிறைவான செல்வம் கிடைக்கும். Regular Plan-யில் முதலீடு செய்யும் போது உங்களுக்கு குறைவான செல்வம் தான் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோடி கணக்கில் லாபம் தரும் சிறந்த 5 SIP திட்டங்கள்..!

SIP-யில் நீண்டகாலம் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

25 வருடம் SIP-யில் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

SIP முதலீடு முதலீட்டு காலம்  மொத்த முதலீட்டின் தொகை வருமானம்
100 307 மாதம் 30,700 10,86,445
1,000 307 மாதம் 3,07,000 1,07,79,723
2,000 307 மாதம் 8,97,000 2,15,59,472
5,000 307 மாதம் 14,95,000 5,44,43,068
10,000 307 மாதம் 30,70,000 10,74,30,425

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement