மாதம் 1000 ரூபாய் முதலீட்டிற்கு.. ரூபாய் 70,09,821 லாபம்.. அருமையான சேமிப்பு திட்டம்..!

Best SIP Plans for 1000 Per Month 

SIP 1000 ரூபாய் முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாம் | Best SIP Plans for 1000 Per Month 

பங்கு சார்ந்த மியூட்சுவல் பண்ட் திட்டங்களில் குறைந்த தொகையில் நின்டாக கால நோக்குடன் முதலீடு செய்ய விரும்பும் நபரா நீங்கள்.. அப்படி என்றால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது மாதம் மாதம் 1000 ரூபாய் முதலீடு மூலம் லட்சக்கணக்கில் நீங்கள் வருமானம் பெற முடியும். மியூட்சுவல் பண்டில் Systematic Investment Plan என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலம் வழங்கப்படும் ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். இதன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதம் 500 ரூபாய் இருந்து முதலீடு செய்ய முடியும்.

அதேபோல் இந்த Systematic Investment Plan மூலம் மாதம் மாதம் முதலீடு செய்யலாம், காலாண்டுக்கு ஒரு முறையோ, குறிப்பிட்டகால இடைவெளியில் முதலீடு செய்து கொள்ளலாம் இந்த திட்டத்தில் பேங்கில் செய்யும் தொடர் வைப்பு போன்றே செய்யலாம். ஆனால் வங்கி தொடர் வைப்புகளில் கிடைக்கும் வருமானத்தினை விட, இந்த SIP-யில் வருமானம் அதிகமாக கிடைக்கும். சரி வாங்க SIP-யில் 1000 ரூபாய் முதலீட்டிற்கு கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்..

 இதையும் கிளிக் செய்யுது படியுங்கள் 👇
 நீங்கள் அஞ்சலகத்தில் செய்யும் முதலீட்டுக்கு அஞ்சலகத்தை விட அதிகம் வட்டி எந்த வங்கியில் கிடைக்கிறது..!

SIP 1000 ரூபாய் முதலீடு – SIP 1000 Per Month for 30 Years in Tamil:

SIP மூலம், மாதம் 1000 ரூபாய் மூலம் கோடீஸ்வரராக முடியுமா? இது குறித்து SEBI-யில் பதிவு செய்த நிபுணர் கூறுகையில், சராசரியாக 15 சதவீதம் வருமானம் கிடைக்கும் என்றால், உங்களது SIP மூலம் 25 – 30 ஆண்டுகளில் தங்களது இலக்கை அடைய முடியாது. இது உங்களது வருமானம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டினையும் அதிகரிக்கனும். இதன் மூலமே உங்கள் இலக்கை அடைய முடியும் என்று கூறியுள்ளனர்.

உதாரணத்திற்கு SIP-யில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதனை 30 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், மாதம் சராசரியாக 15 சதவீதம் வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.

  • ஆரம்ப கால முதலீடு – ரூ.1000
  • மொத்த முதலீட்டு தொகை – ரூ.3,60,000
  • முதலீட்டு காலம் – 30 ஆண்டுகள்
  • வருவாய் விகிதம் – ரூ.66,49,821
  • மொத்த மதிப்பு – ரூ.70,09,821 லாபம் கிடைக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள அதே முதலீட்டில் ஆரம்பித்து ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீதம்  ஸ்டெப் அப் செய்வதாக வைத்துக் கொள்வோம். இதன் மூலம் உங்களது கோடீஸ்வரர் இலக்கினை அடைய முடியும். அதாவது

  • ஆரம்ப கால முதலீடு – ரூ.1000
  • மொத்த முதலீட்டு தொகை – ரூ.19,73,928
  • முதலீட்டு காலம் – 30 ஆண்டுகள்
  • வருவாய் விகிதம் – ரூ.1,19,47,305
  • மொத்த மதிப்பு – ரூ.1,39,21,233 லாபம் கிடைக்கும் இதன் மூலம் உங்கள் கோடீஸ்வரர் இலக்கு நிறைவேறும்.

 இதையும் கிளிக் செய்யுது படியுங்கள் 👇
அஞ்சலகத்தில் 4 சிறந்த சேமிப்பு திட்டம்..! சேமிப்போர்க்கு அதிக வட்டி கிடைக்கும்..!

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்முதலீடு