பேங்க் மூலம் SIP-யில் முதலீடு செய்யலாமா? செய்யக்கூடாத?

Advertisement

Can You Invest in SIP Through a Bank?

பொதுவாக இப்போது பலருக்கு இருக்கும் ஆர்வத்தில் ஒன்று தான். ஏதாவது ஒரு சிறந்த முதலீட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று. இவர்களுடைய ஆர்வத்திற்கு என்று நிறைய முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அந்த முதலீட்டு திட்டங்கள் அனைத்துமே நமக்கு லாபத்தை தருமா அல்லது நஷ்டத்தை கொடுக்குமா என்று அனைத்து விஷயங்களையும் பார்த்து கவனமாக தான் முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் பலருக்கு இருக்கும் ஒரு குழப்பம் என்னவென்றால் பேங்க் மூலம் SIP-யில் முதலீடு செய்யலாமா என்பது. அது குறித்த தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து தகவலை தெரிந்துகொள்வோம்.

பேங்க் மூலம் SIP-யில் முதலீடு செய்யலாமா? செய்யக்கூடாத?SIP

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி எந்த ஒரு விஷயமும் தெரியாதவர்கள் ஆன்லைன் மூலம் பணம்பறிவர்த்தனை செய்ய தெரியாதவர்கள், Email பயன்படுத்த தெரியாதவர்கள் என்று இது போன்று யாராக இருந்தாலும் பேங்க் மூலம் SIP-யில் முதலீடு செய்யலாம்.

பேங்க் மூலம் முதலீடு செய்யும் போது அது Regular Plan-ஆக தான் இருக்கும்.

வங்கி மூலம் நீங்கள் Regular Plan-யில் முதலீடு செய்யும் போது Expense Ratio 1.90% – 2.25% என்ற அளவில் இருக்கும். Expense Ratio என்பது செலவினம் ஆகும். ஆக Regular Plan-யில் முதலீடு செய்யும் போது 1.90% – 2.25% செலவு இருக்கும்.

அதுவே நாம் Direct Plan-யில் முதலீடு செய்யும் போது Expense Ratio என்பது 0.40%-யில் பல முன்னணி நிறுவனங்கள் Expense Ratio-ஐ குறைவாக தருகிறது.

Direct Plan என்பது நாம் நேரடியாக இணையதளம் மியூச்சுவல் ஃபணட்ஸ் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் நேரடியாக முதலீடு செய்வதாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபிஸின் முக்கியமான சேமிப்பு திட்டங்களும், அதன் வட்டிகள் பற்றி தெரியுமா.?

Regular Plan எவ்வளவு லாபம் கிடைக்கும், அதுவே Direct Plan-யில் முதலீடு செய்யும் போது எவ்வளவு லாபம் கிடைக்கும்:

நாம் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் Lump Sum-யில் முதலீடு செய்யும் போது எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க.

Lump Sum முதலீடு  1 லட்சம் 
அதற்க்கான Expense Ratio 0.40%
ஒரு வருடத்திற்கு கிடைக்கும் வருமானம்  12%
முதலீடு காலம்  10 ஆண்டுகள் 
ஒவ்வொரு ஃபண்ட்ஸுக்கும் உள்ள Expense Ratio
Regular Plan 1.90%
Direct Plan 0.40
Index Funds 0.05% – 0.20%

Regular, Direct & Index Funds முதலீட்டின் வேறுபாடுகளும்:

நாம் 1 லட்சம் ரூபாய் பணத்தை Direct Plan-யில் முதலீடு செய்யும் போது நாக்கு 12.202.04 ரூபாய் மட்டுமே வேறுபாடும். அதாவது நமது மொத்த Returns-யில் 4% மட்டுமே இழக்க வேண்டியதாக இருக்கும். அதாவது 10 வருடம் முதலீட்டுக்கு நமக்கு கிடைக்கும் வருமானம் என்பது 3,10,584.82 கிடைக்கும். இவற்றில் இருந்து 0.40% Expense Ratio-வான 12.202.04 ரூபாய் கழிக்கப்பட்டு நமக்கு 2,98,382.68 ரூபாய் கிடைக்கும்.

அதுவே நாம் பேங்க் மூலம் Regular Plan-யில் முதலீடு செய்தோம் என்றால் கிட்டத்தட்ட 54,212.99 ரூபாய் வேறுபாடும். அதாவது நமது மொத்த Returns-யில் 17% இழக்க வேண்டியதாக இருக்கும். அதாவது 10 வருடம் முதலீட்டுக்கு நமக்கு கிடைக்கும் வருமானம் என்பது 3,10,584.82 கிடைக்கும். இவற்றில் இருந்து  1.90% Expense Ratio-வான 54,212.99 ரூபாய் கழிக்கப்பட்டு நமக்கு 256,371.83 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.

ஆக பேங்கை விட நாம் நேரடியாக மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதுதான் மிகவும் சிறந்தது. உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் பற்றி ஒன்று தெரியாது என்றால் மட்டும் பேங்கில் முதலீடு செய்யுங்கள். நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Lump Sum என்றால் என்ன..? இதில் எப்படி முதலீடு செய்வது..!

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement