வீட்டு வாசலில் வங்கி அதிகாரி வசூல் அதுவும் 50 ரூபாயா..? நல்ல திட்டமா இருக்கே

Nitya Nidhi Deposit Canara Bank in Tamil

Nitya Nidhi Deposit Canara Bank in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம் பொதுவாக நாம் அடுத்து வரும் காலங்கள் எப்படி இருக்கும் அதற்கு ஏற்ற மாதிரி என்ன செய்யவேண்டும்? என்பதை பற்றி நிறைய யோசனைகளை வைத்திருப்பீர்கள். அந்த யோசனையில் வரும் காலங்களில் என்ன Investment செய்யலாம், எதில் லாபம் பார்க்கலாம் என்று நிறைய யோசனை உள்ளது. அந்த வகையில் நிறைய விதமான சேவிங் பற்றியும், Investment பற்றி தெரிந்துகொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று Nitya Nidhi scheme பற்றி தெரிந்துகொள்ள போகிறோம் வாங்க..!

Nitya Nidhi Deposit Scheme in Tamil:

தற்போது இரண்டு வங்கிகள் இணைந்து மக்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது. அந்த வகையில் சிண்டிகேட் வங்கியின் பிக்மி டெபாசிட் திட்டம் அந்த திட்டத்தில் இப்போது நிறைய சிறப்பு அம்சம் உள்ளது. இது தினசரி வருமானம் பெறுபவர், மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் நல்ல பலன் பெற முடியும்.

அந்த திட்டம் இப்போது சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கி வங்கியில் நித்ய நிதி டெபாசிட் அதேபோல் பிக்மி டெபாசிட் திட்டம் இந்து இரண்டு ஒன்றிணைந்து தற்போது NITYA NIDHI DEPOSIT திட்டம் என்று பெயரை மாற்றம் செய்து இயங்கி வருகிறது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 Systematic Investment திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

நித்ய நிதி திட்டம் நன்மைகள்:

கனரா வங்கியின் நித்ய நிதி திட்டம் சிறு சேமிப்புகளின் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டமானது அதிகளவு நன்மைகள் தினமும் சம்பளம் வாங்குவோருக்கு நல்ல பலன் அளிக்கும். அதேபோல் வங்கி ஊழியர்கள் நேரடியாக வந்து வீட்டின் வாசலுக்கு பணத்தை வசூல் செய்துகொள்வார்கள். இந்த வசதி தினமும் சம்பாதிக்கும் நபர்களுக்கு பயன் அள்ளிக்கும். இதன் மூலம் வங்கிக்கு அலையவேண்டிய வேலை இல்லை.

அதேபோல் உங்களுக்கு தினசரி பணம் செலுத்த முடியவில்லை என்றால் குறிப்பிட்ட நாள்களுக்கு இடைவெளியில் விட்டு வாசலில் வந்து வாங்கிக்கொள்வார்கள்.

எத்தனை வருடம்:

இந்த திட்டத்தின் முடிவு காலம் 63 மாதங்களாகவும், 5 வருடமாகவும், அல்லது 3 மாதங்கள் அடிப்படியில் உங்கள் பணத்தை சேமிக்க முடியும்.  இந்த திட்டத்தில் 2 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது.

 இந்த திட்டத்தில் தினசரி 50 ரூபாய் முதல் 1000 வரை சேமிக்க முடியும். இதன் மூலம் மாத இறுதியில் 30,000/- வரை சேமிக்க முடியும். சேமித்த தொகையை திரும்ப எடுப்பது பொருத்தும் வட்டி விகிதம் மாறுபடும்.    முக்கியமாக தினமும் 50 ரூபாய் கூட சேமிக்க முடியும் என்பது தான் இந்த திட்டத்தில் முக்கிய சிறப்பு அம்சம் ஆகும். 

Penalty:

இந்த திட்டத்தில் முதிர்வு காலம் முடியும் முன்னரே சேமித்த பணத்தை எடுத்தால் அதற்கு 3 சதவீதம் Penalty அபராதம் பிடிக்கப்படும். மேலும் இத்திட்ட முதலீட்டுக்கு 12 மாதம் குறைவான திட்டத்திற்கு 0.10 சதவீத வட்டியும், 63 மாத முதிர்வு திட்டத்திற்கு 2 சதவீதம் வசூலிக்கப்படும்.

தேவை நிறைவேறும்:

இந்த திட்டத்தில் உங்களின் அவசர தேவைக்கு உதவியாகவும் இருக்கும். அதாவது உங்கள் சேமிப்பில் 75 சதவீதம் கடனாக தொகையை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 Systematic Withdrawal திட்டம் என்றால் என்ன..? அதில் முதலீடு செய்யலாமா..?

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு