Compare Post Office FD And Bank FD
வாசகர்களுக்கு வணக்கம்..! இந்த பதிவின் வாயிலாக வாசகர்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை தான் கூறபோகிறேன். அது என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் உங்களுக்கு பணத்தை சேமித்து வைக்கும் பழக்கம் இருக்கிறதா..? இருக்கிறது என்றால் பணத்தை வீட்டில் சேமித்து வைக்காமல் போஸ்ட் ஆபிஸ் அல்லது வங்கி போன்ற ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேமித்து வையுங்கள். அப்படி செய்வதால் பிற்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். சரி நாம் இப்போது நம் பதிவிற்கு வருவோம். இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக போஸ்ட் ஆபிஸ் FD மற்றும் வங்கி FD இரண்டில் எதில் வட்டி அதிகம் வழங்கப்படுகிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!
SIP-யில் 5000 முதலீடு செய்து 6 கோடி பெறுங்கள்
Compare Post Office FD And Bank FD Interest Rate in Tamil:
அரசு பொதுவாக தபால் நிலையத்தில் கால வைப்புத்தொகை போன்ற பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதுபோல இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதங்களுடன் இணைந்து மற்ற வங்கிகளும் நிலையான வைப்புத் தொகை சேமிப்புக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.
அதுபோல போஸ்ட் ஆபிஸ் FD மற்றும் வங்கி FD இரண்டுமே வெவ்வேறான வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது. அதனால் இவை இரண்டில் அதிக வட்டி எதில் வழங்கப்படுகிறது என்று இங்கு காணலாம்.
போஸ்ட் ஆபிஸ் Fixed Deposit திட்டம்:
போஸ்ட் ஆபிஸ் FD திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை அரசு உயர்த்தியுள்ளது. அதுபோல போஸ்ட் ஆபிஸ் புதிய வட்டி விகிதத்தின் படி முதல் ஆண்டு வைப்புத் தொகையின் வட்டி விகிதம் 6.6% – 6.8% ஆகவும், 2 ஆண்டு வைப்புத்தொகை 6.9% – 7% என்றும் அதிகரித்துள்ளது.
அதேபோல 3 ஆண்டு வைப்புத் தொகை திட்டத்திற்கான வட்டி 6.9% – 7% என்றும், 5 ஆண்டு வைப்புத் தொகை திட்டத்திற்கான வட்டி அதிகபட்சமாக 7% – 7.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு சில வங்கிக்கான FD வட்டி விகிதங்களை பற்றி காணலாம் வாங்க..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பங்குசந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்வது சிறந்தது
State Bank Of India:
SBI வங்கியில் 1 முதல் 2 ஆண்டு காலம் வரையிலான வைப்புத் தொகை திட்டத்திற்கு 6.8% வட்டியை வழங்குகிறது. அதுவே 2 முதல் 3 ஆண்டு திட்டத்திற்கு 7% வட்டியை வழங்குகிறது. மேலும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டு திட்டத்திற்கு 6.50% வட்டி வழங்கி வருகிறது.
HDFC வங்கி:
HDFC வங்கி 1 முதல் 15 மாதங்கள் வரையிலான திட்டத்திற்கு 6.60% வட்டியும், 15 முதல் 18 மாத திட்டத்திற்கு 7.10% வட்டியும், 18 முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகை திட்டத்திற்கு 7% வட்டியும் வழங்கி வருகிறது.
ICICI வங்கி:
ICICI வங்கியில் 1 முதல் 15 மாத குறைவான கால வைப்புத் தொகை திட்டத்திற்கு 6.70% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதுபோல 15 முதல் 2 ஆண்டு திட்டத்திற்கு 7.10% வட்டியும் வழங்குகிறது. மேலும் 2 முதல் 5 ஆண்டு திட்டத்திற்கு 7% வட்டி வழங்கபடுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.10,000 முதலீட்டில் 3 கோடி அடைவது எப்படி?
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |