Demat Account Trading Account Difference in Tamil
பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றனர். பங்கு சந்தையினை பற்றிய முழு புரிதல்களுடன் உங்கள் முதலீடுகளை தொடங்குங்கள். அப்போதுதான் நீங்கள் பங்கு சந்தையில் வெற்றி பெற முடியும். பங்கு சந்தையில் புதிதாக முதலீடு செய்ய நினைக்குறீங்களா? பங்கு சந்தையில் முதலீடு செய்ய இரண்டு விதமான அக்கௌன்ட்களை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அவைதான் Trading Account மற்றும் Demat Account. இப்பதிவில் நாம் பார்க்க இருப்பது Trading Account மற்றும் Demat Account வேறுபாடுகள் என்ன என்பதை பற்றி அடுத்து வரும் பக்கங்களில் தெளிவாக தெரிந்துக்கொள்வோம்.
நீங்கள் share மார்க்கெட்டில் முதலீடு செய்தாலும் சரி வர்த்தகம் செய்தாலும் சரி உங்களுக்கு மூன்று வகையான கணக்குகள் அவசியம் தேவைப்படுகின்றன.
- Bank Account
- Trading Account
- Demat Account
👉டீமேட் கணக்கு என்றால் என்ன? | Demat Account Meaning in Tamil👈
Bank Account (வங்கி கணக்கு)
வங்கி கணக்கு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று மற்றும் அனைவரும் தன் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்ற ஒரு சாதாரண அக்கௌன்ட்தான். வங்கி கணக்கு நம் பணத்தை வைப்பு மற்றும் திரும்ப பெறுவதை எளிதாக்குகின்றது மேலும் பணத்தினை பாதுக்காப்பாக வைக்கும் லாக்கராகவும் செயல்படுகிறது.
Trading Account (வர்த்தக கணக்கு)
Trading Account என்பது உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை Trading Account-க்கு பரிமாற்றம் செய்து Trading Account-லிருந்து ஒரு பங்கை வாங்கவும் விற்கவும் செய்யலாம். அதாவது பங்கை வாங்குவது விற்பது போன்றவற்றை Trading Account மூலம் செய்யலாம்.
👉இன்ட்ராடே டிரேடிங் என்றால் என்ன?👈
Demat Account (டிமேட் கணக்கு)
Trading Account மூலமாக நீங்கள் வாங்குகின்ற Share-யை வைத்து இருக்கின்ற இடம் தான் Demat Account.
உதாரணமாக உங்களிடம் 1 லட்சம் இருக்கிறது. நீங்கள் அந்த தொகையினை முதலீடு செய்ய விரும்பினால் முதலில் 1 லட்சத்தினை வங்கி கணக்கிலிருந்து Trading Account-க்கு பரிமாற்றம் செய்வீர்கள். பின் Trading Account-லிருந்து 1 லட்சத்திற்கான பங்கை வாங்குவீர்கள். இப்போது நீங்க வாங்குகின்ற பங்கை ஒரு இடத்தில் வைக்க வேண்டும் அல்லவா அந்த இடம் தான் Demat Account ஆகும்.
Demat Account இந்தியாவில் இரண்டு விதமான அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
- NSDL (National Securities Depository Limited)
- CDSL (Central Depository Services India Limited)
முதலீடு செய்ய Bank Account, Demat Account, Trading Account இந்த மூன்று அக்கௌன்ட்களும் தேவையா?
நீங்கள் புதிதாக பங்கு சந்தையில் முதலீடு செய்ய போகிறீர்கள் என்றால் மேற்கண்ட மூன்று அக்கௌன்ட்களும் தேவைதான். இந்த அக்கௌன்ட்களை தனித்தனியாக ஓபன் செய்ய தேவையில்லை. வங்கி கணக்கு என்பது அனைவரிடமும் இருக்கின்றன சாதாரண ஒன்றுதான். Trading Account, Demat Account இவை இரண்டையும் தனி தனியாக ஓபன் செய்ய தேவையில்லை.இப்பொழுது இருக்கின்ற பங்குச்சந்தை ப்ரோக்கர்கள் இரண்டையுமே சேர்த்துதான் ஓபன் செய்து தருகின்றனர். முன்பெல்லாம் Trading Account ஓர் இடத்திலும் Demat Account ஓர் இடத்திலும் ஓபன் செய்வார்கள் தற்போது ஆன்லைன் வந்த பிறகு Trading Account, Demat Account இவை இரண்டையுமே ஒரே ப்ரோக்கர்களே ஓபன் செய்து தருகின்றன. வருகின்ற இலாபத்தினை நேரடியாக வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தி விடுகின்றனர்.
👉இன்ட்ராடே டிரேடிங் என்றால் என்ன?👈
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |