ELSS Mutual Fund in Tamil
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் ELSS Fund பற்றிய தகவல்களை தான் தெரிந்து கொள்ள போகிறோம். நாம் கஷ்டப்பட்டு பெறும் வருமானத்தை சேமித்து வைப்பதை விட, அதை மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிறுவனத்தில் முதலீடு செய்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது.
நாம் பெற்ற வருமானத்தை முதலீடு செய்யும் போது அது பிற்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்டி தருகிறது. அதுபோல மியூச்சுவல் ஃபண்டில் பல முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் திட்டங்களில் ELSS Fund -ம் ஓன்று. அந்த வகையில் இந்த ELSS Mutual Fund -ல் முதலீடு செய்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Mutual Fund -ல் முதலீடு செய்பவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..! |
ELSS Full Form
Equity Linked Savings Schemes
ELSS Fund என்றால் என்ன..?
ELSS என்பது ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தை தமிழில் பங்கு இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம் என்று கூறப்படுகிறது. இந்த முதலீட்டு திட்டத்தை வரி சேமிப்பு திட்டம் என்றும் சொல்லலாம்.
இது முதன்மையாக ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்யப்படுகிறது. அதனால், வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் இந்த திட்டம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த திட்டம் மக்களின் நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. அதனால் இத்திட்டம் நீண்டகால முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது.
Hybrid Fund -ல் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..? |
ELSS ஃபண்டில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
இந்த திட்டத்தில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இந்த ELSS திட்டத்தில் முதலீட்டாளர் ரூ. 50,000 வரை முதலீடு செய்திருந்தால், அந்தத் தொகை அவரின் மொத்த வரிக்குரிய வருமானத்தில் இருந்து கழிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவரின் வரிச் சுமையும் குறைக்கப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்கிறீர்கள். அந்த தொகை 30% வரி வரம்பில் இருந்தால், வரி சேமிப்பு தொகையாக உங்களுக்கு 45,000 ரூபாய் கிடைக்கும். எனவே முதலீட்டிலிருந்து வருமானம் வருவதற்கு முன் வரிச் சேமிப்பு தொகை உங்களுக்கு கிடைத்துவிடுகிறது.
இதனால் தான் முதலீட்டாளர்கள் ELSS Fund-களில் அதிகம் முதலீடு செய்கிறார்கள்.
அதுபோல இந்த ELSS திட்டத்தில் 80% வரை ஈக்விட்டி மூலம் முதலீடு செய்து கொள்ளலாம். இருந்தாலும், இந்த திட்டத்தில் Lock In காலம் 3 வருடம் ஆகும். அதனால் இந்த திட்டத்தில் Lock In காலம் முடிவதற்குள் பணத்தை எடுக்க முடியாது.
இதில் வரி சலுகையும் இருக்கிறது அதேபோல நல்ல வருமானமும் கிடைக்கிறது. அதனால் இந்த திட்டம் மற்ற முதலீட்டு திட்டங்களை விட சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குறிப்பு: இந்த ELSS ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன் ஆலோசகர்களிடம் இத்திட்டத்தை பற்றி ஆலோசனை பெற்று முதலீடு செய்வது நல்லது.
பணத்தை சேமிப்பது நல்லதா..? முதலீடு செய்வது நல்லதா..? |
ஓவர்நைட் ஃபண்ட் என்பது என்ன..? அதில் முதலீடு செய்யலாமா..? |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |