ஈக்விட்டி ஃபண்ட் என்றால் என்ன..? | Equity Fund in Tamil

Advertisement

Equity Fund

ஹலோ நண்பர்களே..! அனைவருக்குமே இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்தார்கள். ஆனால் இந்த காலத்தில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். பெரும்பாலும் பல மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன் வருகிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் எத்தனையோ முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஈக்விட்டி ஃபண்ட் என்றால் என்ன என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ELSS Fund என்றால் என்ன..? அதில் முதலீடு செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது..?

ஈக்விட்டி ஃபண்ட் என்றால் என்ன..? 

ஈக்விட்டி ஃபண்ட் என்றால் என்ன

ஈக்விட்டி ஃபண்டுகள் (Equity Fund) என்பது மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். அதாவது ஈக்விட்டி ஃபண்ட்கள் என்பது முதலீட்டின் பெரும் பகுதியை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்ற ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக செயல்படுகிறது. இது குரோத் ஃபண்ட்கள் ( Growth Fund ) என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த திட்டத்தில் முதலீட்டு நோக்கத்தின் அடிப்படையில் வெவ்வேறு நிறுவனங்களின் பங்குகளில் தங்கள் சொத்துக்களை முதலீடு செய்கின்றன. இந்த நிதிகள் நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. அதனால் மூலதன மதிப்பீட்டிற்கான சிறந்த முதலீட்டு விருப்பமாக இது இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகளின்படி, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் சொத்துக்களில் குறைந்தது 65% பங்குகள் மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும்.

நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தையில் வெளிப்பாட்டைப் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் இந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

ஈக்விட்டி ஃபண்டுகளின் வகைகள்:

  1. Large Cap Funds
  2. Mid Cap Funds
  3. Large and Mid Cap Funds
  4. Small Cap Funds
  5. Multi Cap Funds
Mutual Fund -ல் முதலீடு செய்பவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
Hybrid Fund -ல் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement