FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா..?

Advertisement

FD or NSC Which is Better 

பொதுவாக இன்றைய காலத்தில் உள்ள அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை. அத்தகைய ஆசையினை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக விட முயற்சியுடன் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் கஷ்டப்பட உழைக்கும் பணத்தினை முதலீடு என்று செய்தால் என்ன என்று யோசித்துக்கும் போது மட்டும் அதிக குழப்பத்திற்கு உள்ளாகுகிறார்கள். ஏனென்றால் பணத்தை நாம் முதலீடு செய்யும் போது அதில் பெரும்பாலும் இறக்கங்கள் எதுவும் இல்லாமல் ஏற்றங்கள் இருக்க வேண்டும் என்று தான் யோசிப்போம். அதற்கு நாம் ஒரு திட்டத்தினை மற்றொன்றுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அந்த வகையில் இன்று FD or NSC இந்த இரண்டு திட்டத்தில் எது சிறந்தது என்றும், எதில் அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

பிக்சட் டெபாசிட் என்றால் என்ன..?

நம்மிடம் இருக்கும் குறிப்பிட்ட பணத்தினை குறிப்பிட்ட டெபாசிட் காலத்தில் முதலீடு செய்து வட்டியுடன் சேர்த்து வருமானத்தினையும் அளிக்கும் முறையே பிக்சட் டெபாசிட் முறை ஆகும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் என்றால் என்ன..?

nsc scheme in tamil

தேசிய சேமிப்பு திட்டம் என்பது குறைந்த மற்றும் நடுத்தர அளவு பணத்தினை கொண்டிருக்கும் அனைத்து நபர்களுக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. நம்மிடம் உள்ள குறிப்பிட்ட பணத்தினை முதலீடு செய்து நீண்ட கால முதலீட்டினை அதிக வட்டியுடன் பெறும் முறை ஆகும். இதுவே சேமிப்பு பத்திர திட்டம் ஆகும்.

Mutual Funds Vs PPF இரண்டில் எதில் முதலீடு செய்தால் நல்லது தெரியுமா 

FD or NSC இரண்டிலும் உள்ள வேறுபாடு:

Fixed Deposit National Savings Certificate (NSC)
இந்த திட்டத்தினை வங்கிகளில் மட்டும் தான் ஓபன் செய்ய முடியும். ஆனால் இந்த திட்டத்தினை வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் என எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.
இதில் குறைந்தப்பட்ச தொகை வரம்பு இல்லை. இதில் குறைந்தப்பட்ச தொகை 1000 ரூபாய்.
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதிர்வு காலம் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை. NSC திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும்.
வட்டி விகிதம் டெபாசிட் காலம் மற்றும் வங்கியினை பொறுத்து வேறுபடும். வட்டி விகிதம் வருடத்திற்கு 7.7% அளிக்கப்படுகிறது.
மூன்று  மாதத்திற்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது.
உங்களுடைய வட்டி விகிதத்தில் 10% தொகையினை TDS பிடிக்கப்படுகிறது. TDS இதில் கிடையாது.
கடன் பெரும் வசதி கிடையாது. இதில் கடன் பெரும் வசதி உள்ளது.

பிக்சட் டெபாசிட் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் இரண்டில் எது சிறந்தது:

ஒரு நபர் அவருடைய எதிர்காலத்தில் நல்ல வட்டி விகிதத்துடன் கூடிய தொகையினை பெற விரும்பினால் NSC திட்டம் ஏற்றதாக இருக்கும்.

அதுவே பணத்தினை இப்போது வேண்டுமானாலும் பெற வேண்டும் என்றாலும் அல்லது மூத்த குடிமக்கள் அதிக வட்டியினை பெற விரும்பினால் அதற்கு பிக்சட் டெபாசிட் திட்டம் சிறந்ததாக இருக்கும்.

ஆகவே நீங்கள் சேமிக்க விரும்பும் முறையினை பொறுத்து திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

பிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்.. முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement