பிக்சட் டெபாசிட் Vs திரவ நிதி இவ்விரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது தெரியுமா..?

Advertisement

FD Vs Liquid Fund in Tamil

வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருமே மிகவும் கடினமாக கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். அவ்வாறு நாம் கடினமாக உழைத்தும் எந்தவித பயனும் இல்லை நாம் சம்பாதித்த பணம் நம்மிடம் நிலையாக நிலைப்பதில்லை என்று பலரும் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். எனவே தான் அனைவருமே தங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து குறைந்த பணத்தை சேமிக்க வேண்டு என்று நினைப்பார்கள். அப்படி நாம் சேமிக்க வேண்டும் என்றவுடனே நமது மனதிற்கு நினைவு வருவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் பிற்காலத்தில் அது நமக்கு நல்ல லாபத்தை தரும் என்பது தான். அதனால் தான் இன்று பலரும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். சரி இன்று நாம் பிக்சட் டெபாசிட் Vs திரவ நிதி இதில் முதலீடு செய்ய எது சிறந்தது என்று தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன் பெறுங்கள்..!

Term Deposit Vs Fixed Deposit முதலீடு செய்ய எது பெஸ்ட் தெரியுமா

பிக்சட் டெபாசிட் Vs திரவ நிதி எது சிறந்தது..?

Fixed deposit vs liquid funds in tamil

பிக்சட் டெபாசிட் என்பது வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் NBFC -கள் நிலையான வைப்புகளை நிதி தயாரிப்புகளாக வழங்குகின்றன. அதாவது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCகள்) மற்றும் வங்கிகளால் வழங்கப்படும் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு சேவைகள் ஆகும்.

நிலையான வங்கி வைப்புத் தொகையானது வழக்கமான சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. பெயர் குறிப்பிடுவது போல, வைப்புத் தொகையும் வட்டி விகிதமும் வங்கி FD -யின் காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிக்சட் டெபாசிட் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Fixed Deposit பற்றிய தகவல்கள்

திரவ நிதிகள்: இந்த உலகில் உள்ள பலவகையான பரஸ்பர நிதிகளில் இந்த திரவ நிதிகளும் ஒன்று ஆகும். இந்த நிதிகள் பொதுவாக அதிக லாபம் தரும் கார்ப்பரேட் மற்றும் அரசு பத்திரங்கள், கருவூல பில்கள், வணிக ஆவணங்கள் மற்றும் இதுபோன்ற பல குறுகிய கால வட்டி-தாங்கி பண சந்தை கருவிகளில் முதலீடு செய்யப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில், திரவ நிதிகள் 91 நாட்களில் முதிர்ச்சியடையும்.

முதலீடு செய்ய எது சிறந்தது..? 

சிறப்புகள்  பிக்சட் டெபாசிட்   திரவ நிதி
ஆபத்து குறைந்த ஆபத்து அதிக ஆபத்து (நிலையான வைப்புத்தொகையுடன் ஒப்பிடும்போது)
வட்டி விகிதம் நிலையான வட்டி விகிதம் உத்தரவாதமான வட்டி விகிதம் இல்லை

ஃபிக்ஸட் டெபாசிட்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த வருமானத்தை வழங்க முனைகிறது

பதவிக்காலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை 7 நாட்கள் முதல் 91 நாட்கள் வரை
திரும்பப் பெறுவதற்கான வரம்பு நிலையான வைப்புகளுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் உள்ளது (வங்கிக்கு வங்கி மாறுபடும்)

இந்த காலகட்டத்திற்கு முன்கூட்டியே திரும்பப் பெறுதல் அபராதத்தை அளிக்கும்.

7 நாட்களுக்குள் மீட்டெடுக்கப்படும் நிதிகளின் மீது அபராதம்  விதிக்கப்படும் 

7வதுநாட்களுக்கு பிறகு , மீட்பில் அபராதம் இல்லை

சிறந்த பணப்புழக்கத்தை வழங்குகிறது

முதலீடு செய்ய பொருத்தமானவர்கள்  குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டாளர்கள்

 

முதலீடு செய்வது என்பது நல்ல ஒரு நோக்கம் ஆனால் எதில் முதலீடு செய்கின்றோம் என்பதில் தான். அதனால் முதலீட்டாளர்கள் தங்கள் எதில் முதலீடு செய்ய உள்ளம் என்பதை தெளிவாக புரிந்து கொண்ட பிறகு முதலீடு செய்வது நல்லது.

பிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட் முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement